68 விருந்தாளிகள்

624 52 9
                                    

68 விருந்தாளிகள்

அபராஜித்தும் ராதாவும் இணைந்திருக்கும் காணொளி திரையில் தோன்றியது. அபராஜித்தை கோபமாய் ஏறிட்டாள் சவிதா திரிவேதி.

"இல்ல சவிதா, இதெல்லாம் மார்ஃபிங் பண்ண வீடியோ. அதை எல்லாம் நம்பாதே" என்று வழக்கமாய் அனைவரும் பயன்படுத்தும் அதே உத்தியை கையாண்டான் அபராஜித்.

"உங்களுக்கு சந்தேகமா இருந்தா, இன்னும் கூட சில வீடியோஸ் இருக்கு.  நாங்க அதையும் கூட உங்க கிட்ட கொடுப்போம்" என்று கூறிய வாசுதேவனை நோக்கி, சவிதாவும் அபராஜித்தும் திரும்பினார்கள்.

தன் கையில் இருந்த கைபேசியை அவர்களிடம் காட்டினான் வாசுதேவன். தன் கழுத்தில் இருந்த மாலையை கழட்டி, அதை அபராஜித் மீது வீசி எறிந்தாள் சவிதா.

"எங்க அப்பா கிட்ட உன்னை பத்தி விசாரிக்க சொல்லி பலமுறை நான் கேட்டேன். ஏன்னா, நான் உன்னை பத்தி நல்லதா ஒரு விஷயம் கூட கேள்விப்படவே இல்ல. ஆனா, நீ இவ்வளவு கீழ்த்தரமானவனா இருப்பேன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல. என்னை பத்தி நீ என்ன நினைச்சுகிட்டு இருக்க? நீ எவ்வளவு கேடுகெட்டவன்னு தெரிஞ்சதுக்கு பிறகும், நான் உன்னை ஏத்துக்குவேன்னு நினச்சியா?"

"சவிதா, தயவுசெய்து அவங்களை நம்பாதே. அவங்க என்னோட பிசினஸ் எதிரிங்க. இது அவங்களுடைய திட்டமா தான் இருக்கும். நான் இந்த சமுதாயத்துல ரொம்ப கௌரவமா வாழ்ந்துகிட்டு இருக்கிறவன்" என்று உளறினான் அவன்.

"என் ஒய்ஃப் கிட்ட தப்பா நடந்ததுக்காக, என்கிட்ட இவன் அடி வாங்கினான். அந்த காயம் ஆறுறதுக்காக சில நாள் ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி இருந்தான். அதுக்கு பழிவாங்க, இவனோட கீப்பை அனுப்பி  என்னையும் என் வைஃபையும், பிரிக்க நினைச்சான்"

"இல்ல, அவ என்னோட கீப் இல்ல. இவங்க சொல்றது எல்லாமே பொய். அந்த பொண்ணு யாருன்னு கூட எனக்கு தெரியாது"

"அவ இப்ப போலீஸ் கஸ்டடியில் இருக்கா. அவளை நேத்து ராத்திரி நாங்க ஜலஜா, கோபாலோட சேர்த்து போலீஸ்ல ஒப்படைச்சோம்"

தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது)Where stories live. Discover now