59 மன்னிப்பு

541 43 4
                                    

59 மன்னிப்பு

தன் கால்களை ராதா தொட்டவுடன் பின்னால் எதிரி குதித்தான் முகுந்தன்.

"என்ன செய்றிங்க?" என்றான் அதிர்ச்சியுடன்.

மீராவும் அதிர்ச்சி அடைந்தாள் தான். ஆனால் முகுந்தனின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியை பார்த்து அவள் சிரித்தாள்.

"ரொம்ப தேங்க்ஸ் அண்ணா" என்றாள் அந்தப் பெண் மறுபடியும்.

"பரவாயில்லை" என்றான் முகுந்தன்.

சிரித்தபடி அந்த பெண்ணுக்கு பணி நியமன ஆணையை வழங்கினான் வாசுதேவன்.

"தேங்க்யூ சார்" என்றாள் ராதா.

"ஜகா, அவங்களை நீ கைட் பண்ணு" என்றான் வாசுதேவன்.

சரி என்று தலையசைத்தான் ஜெகதீஷ்.

"நீங்க அவர் கூட போங்க" என்றான்.

"சரிங்க சார்" என்ற ராதா, அவனை பின்தொடர்ந்து சென்றாள்.

தனது சிரிப்பை அடக்கியபடி நின்றிருந்த மீராவை பார்த்த முகுந்தன், அவளைப் பார்த்து முறைத்தான். அவர்களைப் பார்த்து வாசுதேவன் சிரித்தான்.

"அந்த பொண்ணுக்கு முகுந்தன் கடவுள் ஆயிட்டான் போல இருக்கே" என்றான் வாசுதேவன்.

அதைக் கேட்டு முகுந்தனும் சிரித்தான்.

"உங்க ஹாலிடேஸ் எப்படி போச்சு?" என்றான் வாசுதேவன்.

"ரொம்ப நல்லா போச்சு"

"சாரிப்பா உங்க ஹாலிடே மூடை நான் ஸ்பாயில் பண்ணிட்டேன்"

"அதெல்லாம் ஒன்னும் இல்ல" என்றான் முகுந்தன்

"ஒரு சாரி சொல்லி நீங்க தப்பிச்சுக்க முடியாது வாசு. கொஞ்ச நாள் கழிச்சு மறுபடியும் நீங்க எங்களுக்கு லீவு கொடுக்கணும்" என்றாள் மீரா கிண்டலாய்.

"கொடுத்துட்டா போச்சு" என்று சிரித்தான் வாசு.

"நீ புது ஃபைலை கிரியேட் பண்ணிட்டியா?" என்றான் முகுந்தன்.

"கிட்டத்தட்ட முடிச்சிட்டேன்" என்றாள் மீரா.

"தட்ஸ் கிரேட்"

தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது)Where stories live. Discover now