64 குழப்பம்

574 47 6
                                    

64 குழப்பம்

வாசுதேவனின் கோப பார்வையை கண்ட ராதா, திகிலடைந்து நின்றாள். மீரா அவன் கோபத்தின் காரணம் புரியாமல் குழம்பினாள். அவன் ராதாவை பார்த்தான் என்று கூறி விட முடியாது... முறைத்தான் என்ற சொல் தான் அதற்கு பொருந்தும்.

ராதாவின் கையில் இருந்த கோப்பை கவனித்த வாசுதேவன், தன் கையை அவளை நோக்கி நீட்டினான். அவன் கேட்பது என்ன என்பதை புரிந்து கொண்ட ராதா, தன் கையில் இருந்த கோப்பை அவனிடம் கொடுத்தாள். அதை அவளிடம் இருந்து பெற்றுக்கொண்டு, அதை மேதசையின் மீது வைத்து விட்டு, தன் இரு கரங்களையும் மேசையின் மீது ஊன்றி, குனிந்து நின்றான்.

"நீங்க கொடுத்த வேலையை நான் கிட்டத்தட்ட முடிச்சிட்டேன் சார்" என்றாள் ராதா.

அவளை கூர்மையான பார்வை பார்த்தான் வாசுதேவன்.

"எனக்கு ஒரு சின்ன சந்தேகம் சார். அதை கேட்கத்தான் நான் உங்ககிட்ட வந்தேன்" என்றாள் ராதா.

"ஆனா, எனக்கு இருந்த சந்தேகம் தீர்ந்துடுச்சி" என்றான் வறண்ட குரலில்.

சங்கடத்துடன் அவளைப் பார்த்தாள் ராதா.

"இந்த ப்ராஜெக்ட்டை பத்தின கவலை இனிமே உங்களுக்கு தேவையில்ல" என்றான் திடமாக.

"ஏன் சார் அப்படி சொல்றீங்க?" என்று தடுமாறினள்.

"ஏன்னா, நீங்க இனிமே இந்த ஆஃபீஸ்ல இருக்கப்போறதில்ல" என்று நிமிர்ந்து நின்றான்.

அதைக் கேட்ட ராதாவுக்கு தூக்கி வாரி போட்டது. மீராவோ வியப்படைந்தாள்.

"சார்...."

"ஃபோன்ல யாரைப் பத்தி பேசிகிட்டு இருந்தீங்க? "

"என்னோட ஃபிரண்டு கூட பேசிகிட்டு இருந்தேன் சார்"

"நீங்க யார் கூட பேசிகிட்டு இருந்தீங்கன்னு நான் கேட்கல. யாரை பத்தி பேசிக்கிட்டு இருந்தீங்கன்னு கேட்டேன். ரெண்டுக்கும் வித்தியாசம் புரிஞ்சுதா?"

"நான் யாரைப் பத்தியும் பேசல சார்"

"அப்போ, நாங்க ரெண்டு பேரும் ஒரே ஆஃபீஸ்ல வேலை செய்யறதால  நான் அவரை தினமும் பாக்குறேன், இப்ப கூட சிஇஓ கேபினுக்கு வரதுக்கு முன்னாடி அவரை பார்த்துட்டு தான் வந்தேன், அவர் கல்யாணம் ஆனவரா இருந்தா இப்போ என்ன? பத்து பொம்பளைங்களை சமாளிக்கிற திறமை அவருக்கு இருக்கு. அவர் பொண்டாட்டிக்கு எங்க உறவு பத்தி தெரியாது. அவர் தெரியக்கூடாதுன்னு நினைக்கிறாரு. ரொம்ப சீக்கிரம் நான் அவர் கூட இருப்பேன். நான் அவர் கூட நெருக்கமா இருந்த ஃபோட்டோவை அவர் வைஃபுக்கு அனுப்பி வைப்பேன். அதுக்கப்புறம் அவ, அவர் வாழ்க்கையில் இருந்து ஓடிடுவா. அவ ஓடினதுக்கப்புறம் அவர் என்கிட்ட தானே வரணும்னு சொன்னது யாரு?" என்றான் வாசுதேவன்.

தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது)Where stories live. Discover now