58 எவ்வளவு முக்கியம்...

612 48 3
                                    

58 எவ்வளவு முக்கியம்...

முகுந்தனை சீண்டினாள் மீரா. தனது இடப்புருவத்தை உயர்த்தி, அவளை பார்த்தான் அவன்.

"என்கிட்ட பேசுங்க"

மீண்டும் அவன் நேராக அமர்ந்து கொண்டான். அவனது மேற்கையை பிடித்து நறுக்கென்று கிள்ளினாள் அவள். அவளை ஒரு கோபப்பார்வை பார்த்து, அவள் கையை விளக்கி விட்டான் அவன். கன்னத்தில் கை வைத்துக் கொண்டு அமைதியாய் அமர்ந்து விட்டாள் மீரா.

ஒன்றரை மணி நேரத்தில் மும்பையை வந்தடைந்த அவர்கள், ஒரு டாக்ஸியை பிடித்துக் கொண்டு கிளவுட் நைன் அப்பார்ட்மெண்ட்க்கு வந்தார்கள். முகுந்தனுக்கு முன்னால் வந்து, கை நீட்டி அவன் வழியை மறித்து நின்ற மீரா,

"என்கிட்ட பேசுவீங்களா, மாட்டீங்களா?" என்றாள்.

அவள் மீது ஒரு அலட்சிய பார்வையை வீசிவிட்டு, அவள் கையை தட்டி விட்டு, தங்கள் அறையை நோக்கி நடந்தான் அவன். பையில் இருந்த தங்கள் பொருள்களை எடுத்து அவற்றை அலமாரியில் அடுக்கினான். அழுக்குத் துணிகளை வாஷிங் மெஷின் போட்டுவிட்டு, தனக்கு முதுகை காட்டிக் கொண்டு அமைதியாய் சோபாவில் அமர்ந்திருந்த மீராவை பார்த்தான். அவள் எதைப்பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறாள் என்று அவனுக்கு புரிந்தது. அவன் அவளை ரொம்பவே எரிச்சல் அடைய செய்து விட்டதும் அவனுக்கு புரிந்தது. அவளுக்கு முன்னாள் வந்து நின்ற அவன், அதிர்ந்தான், அவள் அழுது கொண்டிருப்பதை பார்த்து.

"ஏய் மீரா, நீ அழறியா?"

தன் உதடு கடித்து விம்மலை அடக்கினாள் அவள்.

"ஏய்... நான் சும்மா விளையாட்டுக்கு தான்..."

அவன் கழுத்தை கட்டிக் கொண்டு அழுதாள் மீரா. அவளை அப்படி அழவைத்து விட்டதற்காக வருத்தப்பட்டான் முகுந்தன். இப்படி செய்தால், அவள் தன்னை எப்போதும் தவிர்க்க மாட்டாள் என்பதற்காக தான் அவன் அப்படி நடந்து கொண்டானே தவிர, அவள் இப்படி உடைந்து அழுவாள் என்று அவன் நினைக்கவில்லை.

தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது)Where stories live. Discover now