வெட்கத் தருணம்

187 26 30
                                    

உன்னைக் கண்டு
என்னைத் தொலைத்து
நின்றேன் நீயோ
நிலையறியாமல்
எனை நெருங்குகிறாய்
நீ அருகில் வர வர
எனையே புதுவிதமாய்
உணருகிறேன்
என் கன்னங்கள்
சூடேறி ரோஜா
நிறமாய் ,என்
இதயமோ
என்றுமில்லா
மிகைத் துடிப்பில்
கை கால் உதற
தலை கவிழ்ந்து
நிலம் பார்த்து
நான்...
இப்புதுவித
உணர்வுகள் தான்
வெட்கமோ

Niru's Where stories live. Discover now