வித்தக்காரன்

49 11 13
                                    

ஓராயிரம் ஆசை
மனப்பெட்டகம் கொண்டிருந்த
போதிலும் உன் மீது,
உனைக்காணும் அவ்வொரு
நொடிதனில்,
விழிநீரும் தயக்கமும்
தாபமதை முந்திட
இதழ்களும் மௌனப்போரிட
ஊமைக் குழந்தையாய்
உன் முன் நான்
நீயோ என் தயக்கமறிந்தும்
கண்களில் சிறு கோபமும்
குறும்பும் போட்டியிட
உனக்குரிமையான
உன் கைகள் தீண்டிடா
என் பாகங்களை
உன் விழிகள் தீண்ட
நானே தயக்கமுடைத்து
உனை அணைக்கும்
நிலைக்குத் தள்ளிய
வித்தக்காரன் நீயடா








Niru's Where stories live. Discover now