உன்னில் என்னை உணர்வாயா

115 26 79
                                    

சுகந்தமாய் சுகம் தந்தாலும் நெருப்பாய் தகிக்க
வைப்பதேனோ உன்
நினைவுகள்

கனவில் உன்னவளாய்
உணர்த்தி நினைவில்
தள்ளி நிறுத்துவதேனோ

கற்பனையில் உன்னுடன்
குடும்பமாக வாழும் நான்
நினைவில் வேறு துணைக்கு இணையாகும் நிலையேனோ

உண்மையுரைத்து உன்
விலகலை ஏற்பதா
பொய்யுரைத்து தோழியென்ற நிலையில் பயணிப்பதா

எந்தன் நிலையுணராத
உன்மேல்  காதலும் கசப்பும் சரிவிகிதத்தில் வளர எதை பிரயோகிப்பேன் உன்னில்
என்னை உணர்த்த

Niru's Where stories live. Discover now