நட்பே நட்பே

62 15 23
                                    

இருவேறு துருவங்களாக மாறுபட்ட சூழ்நிலையில் வெவ்வேறு
விதமான உறவுகள் சூழ
வாழ்ந்தாலும் நட்பு ஆழமானது தான்

அவனுக்கும் அவளுக்கும்  பொறுப்புகள் பல
கடமைகள் எப்போதும்
செயலாற்ற தயாராய்
இருந்தும் மனம் சில நேரங்களில்
அவர் பக்கம் சாயும்

தோழனில் தாய்மை காணுவாள் அவள்
தோழியில் அன்னை அறிவுரை காணுவான் அவன்

காலம் முப்பது வருடங்கள்
தின்ற போதிலும் நேசம் குறையா நெஞ்சுடன் கன்னியமான நட்பு கொண்டவர் கோடி

இலவசமாய் நம்மில் அதிகரிப்பது வயது மட்டுமே அதனால்
என்ன

நட்பிற்கு வயதேது
பாலின மாறுபாட்டால் நட்பின் ஆயுட்காலம் குறைவதா

சினிமாக்களில் பார்த்து பிரம்மிக்கும் ஆண் பெண் நட்பு நிஐ உலகில் அதே கண் கொண்டு கண்டால் சாத்தான் கண்ணாக மாறிடுமோ

நட்பிற்கு வயதில்லை பாலின வேறுபாடில்லை
சமூக ஏற்றத்தாழ்வுகள் இல்லை

நட்பில் கள்ளமில்லை கபடமில்லை
பின் வயதுவரம்பு பாலின வேறுபாடுகள் மட்டும் ஏன் இருத்தல் வேண்டும்
இவற்றை வெளியேற்றி உன்னதமான நட்பை ஆராதிப்போம்

Niru's Donde viven las historias. Descúbrelo ahora