எந்தன் வானரங்கள் 😝

102 23 37
                                    

எல்லா தந்தைகளும் இப்படித்தானா இல்லை இவன் மட்டும் இப்படியா

அலப்பறைகள் அதிகம் என்றாலும் பொறுத்துக் கொள்வேன் இவர்களின் பாசப் போராட்டத்தை தவிர

வானரப்படைகளும் தோற்கும் என் செல்லங்களின் ஞாயிற்றுக்கிழமை அலப்பறைகளில்

மகள் வரும் வரை என்னைச் சுற்றி சுற்றி இம்சைகள் செய்தான்
வந்தபின்பு அவன் கண்களுக்கு என்னைத் தவிர எல்லாம் தெரிகிறது

இழுத்து அறையலாம் என்றாலோ அவன் என்னை விட பைத்தியம் திருப்பி அறைந்து விடுவான்

இரண்டு நாள் சமைக்காமல் இருந்து கூட பார்த்தேன் தப்பித்தோம் என்று வெளியில் வாங்கி உண்டதுகள் என்னை வெறுப்பேற்றி

பல நாள் அவர்களின் விளையாட்டுப் பொருட்களில் நானும் அடக்கம்
மாமியாரின் மகிமை உணர்ந்த தருணங்கள் அவை

இவர்களின் மகிழ்ச்சியில் உலகை வென்ற சுகம் கிட்டினாலும் சிறு பொறாமையும் உதிக்கிறது

Niru's Where stories live. Discover now