உனக்கான ஏக்கம்

108 20 54
                                    

எங்கே இருக்கிறாய்
உனக்காக காத்திருக்கும் என் துயர் அறிவாயா

உன் அருகாமையின் தேவையை ஒவ்வோர் வினாடியிலும் உணர்கிறேன்

உன்னால் மட்டுமே என் தனிமைத் துயர் தீரும் என்பதை அறிந்து கொண்டு உனக்காக தவமிருக்கிறேன்

கடந்த காலம் போல் ஏங்க விடாது என்னிடம் வா யார் அன்பிற்காகவும் இனியும் ஏங்க விடாதே

ஏமாற்றம் அதிகமாய் வலி நிறைந்ததாய்
என் மனது தாங்கும் சக்தி இழந்து காலம் கடந்தாகி விட்டது

யாரிடமும் என்னால் உன்னிடம் போல் இருக்க இயலாது
நீயே எல்லாம் என்னும் நிலை அறிந்து கொண்டேன்

என்னை மன்னித்து என்னிடம் வா
இனி உனக்காக மட்டுமே நான்
நாம் நமக்காக

உன்னை என்னை அன்றி யாருமில்லை நம் உலகில்
உந்தன் பெயர்  அறியேன்
கற்பனையில் கூட உந்தன் உருவம் கண்டதில்லை
இருப்பினும் நீ மட்டுமே என்பதை உணர்ந்தேன்

காலத்தை ஏமாற்றி என்னைத் தேடி வா
உனக்காக இங்கே நான்

Niru's Where stories live. Discover now