திமிர் அவன் உடன்பிறப்பு

208 35 99
                                    

திமிர் அவன் உடன்பிறப்பு

என் குறுஞ்செய்தி
கண்டும் பதில் அனுப்பாமல் என்னை
தவிக்க விடும் அவன் திமிர்

எவ்வளவு நீண்ட குறுஞ்செய்தியாகினும்
அவன் அனுப்பும்
ஒரே பதில் கால நேரம் பொறுத்து வணக்கங்கள் அவன் திமிர்

அவன் அழைப்புகளுக்கு
காத்திருப்பேன் எனத் தெரிந்தும் ஏங்கவிடும் அவன் திமிர்

எல்லாவற்றிலும் என்னை அலட்சியமாய் என்னை பொருட்டாய் எண்ணாத அவன்  திமிர்

ஆயிரம் இதயங்கள் அவனுக்காய்த் துடிக்க அதில் சிறு இதயம் என்துடிப்பை ஒதுக்கும்
அவன் திமிர்

என்னையே இழந்து எனக்குள் அவனை வாங்கத் துடிக்கும் என் மனதைத் தூக்கியெறியும் அவன் திமிர்

என் சுயம் யாவற்றையும்  இழந்தும்
அவனைத் தேட வைக்கும் அவன் திமிர்

அவன் புறத்தை விட நான் நேசித்த அழகான அகத்தைக் கொண்ட அவன் திமிர்

Niru's Where stories live. Discover now