நீயின்றி நானறியேன்

112 23 31
                                    

எத்தனை உயிர்கள் உன்னை நேசித்தாலும்
உன்னை வெறுக்கும்
ஒற்றை உயிர் நான்

சிந்தை முழுதும் நீயாகிட சித்தம் கலங்கிட உன்னை வெறுக்கின்ற
நான்

காணும் யாவிலும் நின்னை உணரச்செய்த உன்னை
வெறுக்கும் நான்

அன்பும் அக்கறையும்
உன்னில் கொண்ட என்னை விலகிய உன்னில் வெறுப்பாய் நான்

நீயின்றி  நானறியேன்  என்றுணர்ந்தும் இடையில் விட்டுப்பிரிந்து வேறு
உலகுக்குச் சென்ற
உன் அன்பை  வெறுக்கின்ற நான்

எவ்வுலகாயினும் ஒன்றாய் வாழ்வோம்
என்றுரைத்து இடையில் பிரிந்த உன்னில் வெறுப்பின் பிடியில் நான்

நம் வாழ்வின் எல்லைக் கண்டபின் கைக்கோர்த்து ஒன்றாய் காண வேண்டிய  உலகை இடையில் கையுதறி காணச்சென்ற நின் நினைவுகளில் வெறுப்புப் படிந்த நான்

சுற்றத்தார் சுற்றியிருக்க
என் சுற்றம் நீயற்றுப்போகிட நிந்தன் பிரிவில் தனிமை உலகை உணர்த்திய உந்தன் மீது நெருப்பாய் வெறுப்பில் நான்

Niru's Where stories live. Discover now