மழை

65 22 25
                                    

என் நெடுந்தூரத் தோழியவள்

எந்த சாதனமுமில்லை
அவளைத் தொடர்பு கொள்ள

அவளின் வருகையை உணர்த்தும் அவளுக்கான பிரத்யேக வாசனை

என்னைத் தேடி வருவாள் ஆர்ப்பாட்டத்தோடு

எந்த தடையுமில்லை எங்களுக்கிடையில்

என்னைக் காணும் ஆனந்தத்தில் அவள் வடிக்கும் கண்ணீர்த்துளிகளோ
என் உடலை மட்டுமல்ல உள்ளத்தையும்  ஈரமாக்கிடும்

அவளின் கண்ணீரில் என் பாவங்கள் அத்துனையும் கரைத்து விடுகிறாள் மழை மங்கையவள்

Niru's Where stories live. Discover now