என் முகமறியா காதலன்

158 30 101
                                    

என்னுள் இருக்கும்
முகமறியா காதலன்
நீ

சுற்றம் சூழ்ந்து
சுற்றி வளைத்து
உன்னைக்  கடத்த
வேண்டி உனக்கான
மங்கை நான்

நமக்கான கனவுகளுடன்
கற்பனை கலந்து
உனக்காய் நான்

வருடங்கள் உருண்டாலும்
நமக்காய் நாம்
காலம் பொறுப்போம்

உன்னவளாய் நானும்
என்னவனாய் நீயும்
காதல் கொண்டாட
பிறரை அனுமதியோம்
நமக்கான இடத்தில்

ஆயிரம் உறவுகள் சூழ
சடங்குகள் சம்பிரதாயங்கள் நிறைவேற்றி உன் கையினால் மங்களனான்
வகிட்டில் குங்குமம்
ஏற்க காத்திருக்கும்
காதலியாம் உன் மனைவி

Niru's Where stories live. Discover now