எந்தன் அன்பின் அழகே

81 13 13
                                    

                அன்பின் அழகே

யாரோவென இருந்திட இயலவில்லை
உனை கண்ட நொடிதனிலே

ஏனோ உன்னால் பூகம்பம் என் உள்ளத்துள்  தடுக்கும் எண்ணமில்லாமல் புதைத்துக் கொண்டேன்  என்னுள் உன்னை

நீயேயெல்லாம் என்றாவேன் என
சிறிதும் எண்ணவில்லை நிகழும் வரை

உன்னையே எண்ணி மூர்ச்சையாகிடும் பேராவல் கொண்டேன் உந்தன் என் மீதான காதல் கண்ட நொடிதனிலே

நீ மட்டுமின்றி உனைப்போன்றதொரு அன்பான உறவுகளை அளித்தாயே அதனாலா இவ்விளைவுகள் என்னுள்

நான் கண்ட வித்தியாசப் பார்வைகளில் உன் பார்வை மட்டுமே காதலுடனான காந்தப்பார்வை என்பதனால் தானோ இம்மாற்றங்கள் என்னுள்

நீயும் நானும் ஓருயிர் என்றாகிட ஆராய்தல் எதற்கோ எந்தன் அன்பின் அழகே


Niru's Where stories live. Discover now