Author note

632 42 38
                                    

முற்றுப்பெற்ற ஐந்தாவது கதை.
😊😊😊😁😁😁🥳🥳🥳🤩🤩🤩😎😎😎

'நீயன்றி வேறில்லை'
கதையை வாசித்த அனைவருக்கும் நன்றி. நிறையக் கற்றுக்கொண்டேன் இக்கதையை எழுதும் காலத்தில். கற்றுக்கொண்டதை முடிந்தவரை சொல்லவும் முயன்றிருக்கிறேன். தமிழகம் மட்டுமல்லாது, இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு சோதனைமேல் சோதனை நடந்துகொண்டிருக்கிறது. சரியான அங்கீகாரமும் இன்றி, உழைப்புக்கேற்ற ஊதியமும் இன்றி, நாளொன்றுக்கு சுமார் ஆயிரக்கணக்கான உழவர்கள் தொழிலை விடுகிறார்கள், இல்லை உயிரையே விடுகிறார்கள். இக்கதை கற்பனைக் கதைதான் என்றாலும், தமிழகத்தின் பல கிராமங்களில் இதுபோன்ற நில அபகரிப்பு குற்றங்கள் நடந்திருக்கின்றன.

வெறும் பத்து ரூபாய்க்கு, இருபதாயிரம் லிட்டர் நிலத்தடி நீரை தினமும் உறிஞ்சி எடுத்து குளிர்பானம் செய்யும் ஒரு தொழிற்சாலை, கோடிக்கணக்கான லிட்டர் நீரை விரயமாக்கும் கார் தொழிற்சாலை, மற்ற நாடுகளிலெல்லாம் தடை செய்யப்பட்டு, இந்தியாவின் வியாபார ஒப்பந்தங்களால் தமிழ்நாட்டுக்கு வந்து மண்வளத்தை அழித்துக்கொண்டிருக்கும் உலோகத் தொழிற்சாலை என நாளிதழ்களில் படித்தபோது வந்த அதிர்ச்சியாலும், ஆதங்கத்தாலும் எழுதத் தொடங்கிய புத்தகம் இது. ஒரு புத்தகத்தால் என்ன பெரிய மாற்றம் வந்துவிடப் போகிறது? உண்மைதான். இதனால் மட்டும் எதுவும் மாறப்போவதில்லை. ஆனால், நம்மால் முடிந்த விழிப்புணர்வை நாலுபேருக்கு சொல்வது நல்லதுதானே?

மீத்தேன் திட்டம், எட்டுவழிச் சாலை, கார்பன் குழாய், காவிரி எண்ணெய்த் திட்டம் என்று, தினம்தினம் ஆயிரக்கணக்கான ஆபத்துக்களை சந்தித்து வருகின்றன நம் நாட்டின் வயல்கள். செத்துசெத்துப் பிழைக்கும் விவசாயிகள், ஒருபோதும் நமக்கு உணவிட மறந்ததில்லை. வாழ்க்கையெல்லாம் போராட்டத்தில் போனாலும், நமக்கெல்லாம் சோறிடும் அந்த ஒரு திருப்திக்காகத் தான் இன்னும் ஏர்பிடிப்பதாகச் சொன்னார் ஒரு உழவர்.

எனவே, நம்மால் முடிந்தவரை, உழவை மதிப்போம், உழவரைப் போற்றுவோம்..

கதையைப் பற்றிய உங்கள் கருத்துக்களை என்னிடம் கூறலாம்.

ஏதேனும் குறைகள், மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும் இங்கே கூறலாம்.
Lets have a discussion here.

மீண்டும் அனைவருக்கும் நன்றி ..

'உயிர்வரை தேடிச்சென்று' கதையை எழுதத் தொடங்கியது நினைவிருக்கிறது. ஆனால், தேர்வுகள் எப்போதென்றே தெரியாத பதற்ற சூழல் இங்கே நிலவிவருவதால், எழுத்துப் பணிக்குத் தற்காலிக ஓய்வு தரப்படுகிறது. இக்கதை முற்றுப்பெறாமல் இருந்தது சங்கடமாக இருந்தது. எனவேதான் இப்போது எழுதி முடித்தாயிற்று. ஆனால், அவசரத்துக்காக எழுதிக் கதையில் எவ்விதக் குறையும் வைக்கவில்லை. பார்த்துப் பார்த்து எழுதிய கதைதான். இறுதி வரைக்குமே அந்த ஆர்வத்தைத் தக்கவைத்துத் தான் எழுதினேன்.

எனவே, நன்றி வணக்கம். தேர்வுகள் முடிந்ததும் சந்திக்கலாம்.

அதுவரை மற்ற கதைகளைப் படிக்கவும். அமேசானில் உள்ளது. என்னிடம் பேச நினைத்தால், வாட்பேடின் dmஐ உபயோகப்படுத்தலாம். எப்போதாவது வந்தால், நிச்சயம் பேசுகிறேன்.

டாட்டா...

Love,
Madhu_dr_cool.
👋👋

நீயன்றி வேறில்லை.Where stories live. Discover now