45

662 81 8
                                    

அகரவரிசையில் இருந்த அந்த ப்ளேலிஸ்ட்டைத் திருத்தி, 'custom order' என்று மாற்றியபோது, பாடல்கள் வேறொரு விசேஷமான வரிசையில் அடுக்கப்பட்டன. மூச்சை அடக்கிக்கொண்டு அதுவே விக்கி அடுக்கிய வரிசையாக இருக்கவேண்டுமென வேண்டிக்கொண்டு, பாடல்களை நன்றாக உற்றுப் பார்த்தாள். அதில் முதல் எழுத்துக்களை எல்லாம் எடுத்துத் தனியாக எழுதிப்பார்த்தாள். அதிலும் ஒன்றும் கிடைக்கவில்லை.

"H M B T T.. இதுல எதுவும் புரியலையே.."

திவாகர் அப்போதும் எரிச்சலாகவே இருந்தான்.

"இதெல்லாம் வேஸ்ட் வானி.. ஏதோ random orderல இருக்கற பாட்டுக்களை வச்சு என்ன கண்டுபுடிக்கப் போற?"

"கன்னாபின்னான்னு இல்ல, இதுல ஏதோ மெசேஜ் இருக்கு. விக்கிக்கு, வயலுக்கு அடுத்ததா பிடிச்சது அவனோட இந்த பாட்டு கலெக்சன் தான். இதுல கண்டிப்பா அவன் எதையோ வச்சிருப்பான். என்னைக் கொஞ்சம் யோசிக்க விடு."

அந்தப் பாடல்களை ஆரம்பத்திலிருந்து பாடவிட்டாள் அவள். முதல் பாடல் அழகான மெல்லிசையில் தொடங்கி,
"வேறே கொத்த பூமிபை உன்னானா..
ஏதோ விந்த்த ராகமே வின்னானா.." எனப் பாடிடத் தொடங்கியது. அது முடிந்ததும், சற்றே வித்தியாசமான கிட்டார் இசையுடன்,
"மதுரமே ஈக்ஷனமே.. ஓ செலீ.." என்று பெண்குரலில் பாடியது.

ஏதோ கிடைத்துவிட்டதைப் போல விரலை சொடக்கினாள் அவள். கேள்வியாக ஏறிட்டான் அவன்.

"பாட்டோட முதல் எழுத்தையெல்லாம் சேர்த்தோம்ல, இப்ப பேரோட எழுத்தை சேர்த்தாம, பாட்டு வரியோட முதலெழுத்தை எல்லாம் சேர்த்திப் பாக்கலாம்!!"

மறுபடி ஒரு தாளில் 'V M..' என்று அவள் எழுதப்போக, தடுத்து, "இங்கிலீஷ்ல இல்ல, தமிழ்ல எழுதிப்பாரு" என்றான் அவன். அவள் தலையை அசைத்து சம்மதித்தாள்.

'வே ம ப த த ஊ ர.. வி ன ஞா னி'

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். அவள் கையிலிருந்த பென்சிலை வாங்கியவன் தாளில் சில திருத்தங்கள் செய்தான். புள்ளிகளும் கொக்கிகளும் இட்டபின்னர் மாறிய எழுத்துக்களை இருவருமே திகைப்போடு பார்த்தனர்.

நீயன்றி வேறில்லை.Where stories live. Discover now