31

977 87 54
                                    

....

வேதாசலமும் நஞ்சேசனும் சிறுபிராயம் முதலே நண்பர்கள். நடுத்தரக் குடும்பங்கள். நஞ்சேசன் தனது வயலிலேயே விவசாயம் பார்த்தார். வேதாசலம் கூலிவேலைகள் எது கிடைத்தாலும் செய்துகொண்டிருந்தார். வேம்பத்தூரில் இரண்டு குடும்பமும் எதிரெதிர் வீட்டில் வாசம். சுதாகர், விக்னேஷ், திவாகர், வானதி என வரிசையாக ஒவ்வொரு வருட இடைவெளியில் பிறந்த குழந்தைகள். மீனாட்சியும் வசந்தியும் சகோதரிகள் போலவே பழக்கமும் புழக்கமும். ஊரே வியந்து பார்க்குமளவு ஒற்றமை இரண்டு குடும்பத்துக்கும்.

இருபத்தைந்து வருட சினேகிதம்... ஆல்போல் தழைத்து அழகாக வளர்ந்திருந்தது. குழந்தைகள் நால்வரும்கூட உடன்பிறவா சகோதரர்கள் போல ஒருகணமும் ஒருவரையொருவர் பிரியாமல் இருந்தனர்.

நஞ்சேசனுக்கு ஒரு தங்கை, நாச்சம்மாள். பதினேழு வயது சிறுமி அவள். சுட்டித்தனங்கள் நிறைந்த மங்கை. வாண்டுகளின் தலைவி. தாய்போல் அவர்கள் நால்வரையும் எப்போதும் பார்த்துக்கொள்பவள். தாய் தகப்பன் இல்லாத பெண் அவள். அண்ணனின் வீட்டில் வளர்ந்த செல்லப்பெண். அந்தக் குடும்பத்தில் முதன்முதலில் பள்ளிக்குச் சென்ற  பெண்ணும் அவளே. நஞ்சேனின் தேவதை வானதியென்றால், அவர் கும்பிடும் சாமிபோல நாச்சம்மாள். வேதாசலமும் அவளைத் தன் தங்கையாகவே பாவித்து,  பாசத்தைப் பொழிந்துவந்தார். மீனாட்சிக்கும் வசந்திக்கும் தலைமகளே அவள்தான் என்பதுபோல் இருப்பாள் அவள். இரண்டு குடும்பத்தின் குலவிளக்குப்போல இருந்தவள்.

பூப்பெய்தியபோது ஊரே அசந்து மூக்கில் விரல்வைக்கும்படி அவளுக்குப் போட்டி போட்டுக்கொண்டு சடங்குகள் செய்து பரிசுகள் வாங்கித்தந்தனர் இருவீட்டாரும். ஊரிலில்லாத அழகியென இளைஞர்கள் அசந்து பார்த்தாலும், ஐய்யனார்போல இரண்டு அண்ணன்களைப் பார்த்ததும் ஓடிவிடுவர் அவர்கள். ஊரில் பத்தாம் வகுப்பு வரையில் மட்டுமே பள்ளிக்கூடம் இருக்க, தங்கையின் ஆசைக்காக, கல்லூரணி அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்த்தனர் அவளை.

நீயன்றி வேறில்லை.Where stories live. Discover now