3

1K 95 39
                                    

தந்தையின் நண்பர் குடும்பத்தின் இறப்புக்காகச் சென்றிருந்தான் திவாகர்.

கூகுள் செயலியில் தான் இருக்கும் இடம் வேம்பத்தூர் எனக் காட்ட, எப்போதாவது இப்பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறோமா என யோசனையுடன் நின்றுகொண்டிருந்தான் அவன்.

கூடத்தில் நின்றபடி யோசனையில் ஆழ்ந்திருந்த திவாகரைக் கையைக் காட்டி அருகில் அழைத்தார் அவன் தந்தை வேதாசலம்.

போகலாமா வேண்டாமா எனத் தயங்கியவன், சுற்றத்தாரின் பார்வை தன்மீது படர்வதை உணர்ந்து அப்பாவின் திசையில் நகர்ந்தான்.

"கூப்டீங்களா அப்பா..?"

மகனிடம் திரும்பி, "தம்பி திவா, இது வானதி.. இந்தக் குடும்பத்தில இப்போதைக்கு உயிரோட இருக்க ஒரே வாரிசு. உனக்கு வானதியை ஞாபகம் இருக்கா?" என்று வினவினார் பெரியவர்.

பொய்சொல்ல விரும்பாமல் மறுப்பாகத் தலையசைத்தான் திவாகர்.

"சரியா தெரியலப்பா.."

அவள் நிமிர்ந்து அவனை நம்பமுடியாமல் பார்த்துவிட்டு முறைக்க, சிவந்திருந்த அவள் கண்களில் ஏதேதோ புரியாத கேள்விகளெல்லாம் இருப்பதைக் கண்டு குழம்பிப்போனான் அவன்.

மேற்கொண்டு அவர் எதுவும் பேசுவதற்குள் அறையில் திடீரென்று சலசலப்பு ஏற்பட, ஒருநொடி அனைவரின் கவனமும் திரும்பியது.

அவ்வூரின் பெயர்போன பணமுதலையான மலையப்பன் தன்னுடன் மேலும் நான்குபேரை சேர்த்துக்கொண்டு உள்ளே நுழைந்தான். கூடத்தில் கிடத்தப்பட்டிருந்த சடலங்களைப் பார்த்தவன் அலட்சியமாக முகத்தைத் திருப்பினான். பொதுவாக யாரையும் பார்க்காமல் தன் அல்லக்கைகளுடன் பேசுவதுபோல, "என்ன பாலு... இப்படி ஆகிப்போச்சு? போனவாரம் தான் என்கிட்ட வந்து இன்னும் ஒருவாரத்துல உன் பணத்தை வட்டியும் மொதலுமா திருப்பித் தந்துடறேன்னு வீம்பா பேசிட்டுப் போனாரு பெரியவரு... அதுக்குள்ள குடும்பமா இப்டி நடுக்கூடத்தில செத்துக் கிடக்கறாய்ங்களே.." என்றான்.

நீயன்றி வேறில்லை.Where stories live. Discover now