2

1.3K 86 37
                                    

மதுரை-சிவகங்கை தேசிய நெடுஞ்சாலையிலிருந்து துணைச்சாலைக்குள் நுழைந்தது அந்தச் சிவப்பு பொலெரோ கார்.

காலை வெளிச்சம் கண்ணாடிகளில் பட்டுப் பிரதிபலிக்க, சீரான வேகத்தில் வண்டி சென்றுகொண்டிருக்க, எவ்வித இரைச்சலுமின்றி நிசப்தம் நிலவியது காரினுள்.

ஓட்டுனர் சம்பளத்திற்கு வேலை செய்பவர் என்பது அவரது உடல்மொழியிலேயே தெரிந்தது. அவரது பணிவான உருவத்திற்கு நேரெதிராய், அவரது அருகில் அமர்ந்திருந்தவரது கம்பீரமான உடல்வாகு இருந்தது. அகவை ஐம்பதைத் தொட்டிருந்தாலும் இன்னும் தேகத்தில் குறையாத முறுக்கும் கண்களில் அழியாத ஒளியும் இருந்தது அவரிடம்.

பின்சீட்டில் அமர்ந்திருந்த வாலிபனோ அந்த மண்ணுக்கும் மனிதருக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லாதபடி இருந்தான். கருப்பு ஜீன்சும் இளமஞ்சள் சட்டையும் அணிந்து காதில் இயர்பாட் மாட்டி, வெறும்வாயை மென்றபடி, கைபேசியின் தொடுதிரையில் லயித்திருந்தான் அவன். முகத்தில் தெரிந்த அமெரிக்கச் சாயல் கண்கூசச் செய்யுமளவு முரண்காட்டியது. முன்னால் அமர்ந்திருந்தவரின் மகன்தான் நான் என்று இவன் சத்தியம் செய்தால்கூட நம்பமுடியாது.

"தம்பி.. காலைல சாப்ட்டுட்டு தானே வந்த?"

பெரியவர் வேதாசலம் சீட்டிலிருந்து திரும்பி மகனிடம் கேட்க, அந்த சீமந்தப் புத்திரனோ இயர்பாட் மாட்டியிருந்ததால் காதுகேளாதவன் போலவே அமர்ந்திருந்தான். தான் கேட்டதற்குப் பதில்வராமல் போகவே தனக்குள் முனகிக்கொண்டு இன்னும் சத்தமாக அவளை விளித்தார் அவர்.

"தம்பி திவா!!"

வேறு எவரும் இப்படி அவரை அவமதித்திருந்தால் நடப்பதே வேறு. மகன் என்பதனால் அவனை மன்னிக்க மட்டுமே முடிந்தது அவரால். ஓட்டுனரும் இந்த சம்பாஷணையைக் கவனித்தாலும், முதலாளி மீது கொண்ட பயம்கலந்த மரியாதையால் அமைதியாக இருந்தார்.

மூன்றாவது முறையாகக் கூப்பிட்ட போது தெய்வத்தின் அருளால் அவன் செவிகளை அவரது குரல் எட்ட, இடதுகாதிலிருந்து இயர்பாடைக் கழற்றிவிட்டு அவசரப் பணிவுடன், "அப்பா.. என்னப்பா?" என்றான் திவாகர் என்ற அந்த யுவன் .

நீயன்றி வேறில்லை.Donde viven las historias. Descúbrelo ahora