13

945 85 65
                                    

தங்கள் அறையில் பக்கவாட்டில் இருந்த மேசையினருகில் இரண்டு நாற்காலிகள் போட்டு, வானதியும் திவாகரும் அமர்ந்து, வேம்பத்தூர் வீட்டிலிருந்து எடுத்துவந்த கோப்புக்களை ஆராய்ந்து கொண்டிருந்தனர்.

சட்டென எதையோ பார்த்து அவள் அதிர்ச்சியாக மூச்சிழுக்க, திவாகர் கரிசனமாகத் திரும்பினான்.
"என்னாச்சு?"

அண்ணனும் அப்பாவும் பயிர் நாற்றுக்களைப் பிடித்துக்கொண்டு வயலில் நிற்கும் புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள் அவள். அனேகமாக இதுதான் விகடனில் பிரசுரமான படமாக இருக்கவேண்டும் எனக் கண்டுகொண்டான் திவாகர்.

"நான் யோசிச்ச கோணம் ஏன் தப்பா இருக்கக்கூடாது? ஏன் அப்பாவைக் குறிவைச்சு நடக்காம, அண்ணனைக் குறிவச்சு இந்தத் தாக்குதல் நடந்திருக்கக் கூடாது? அப்பாவுக்கு அடுத்தபடியா அவன்தான் வயலைப் பாத்துக்கிட்டான். கொஞ்சம் அவசரக்காரன்தான். ஆனா யாருக்குமே கெடுதல் நினைச்சதில்ல அவன்..."

மீண்டும் அவள் கண்கலங்க, திவாகர் செய்வதறியாது பார்த்திருக்க, நல்லவேளையாக ஹரிணி உரத்த குரலில் அவர்களை அழைத்தவாறே வந்தாள்.

"அண்ணா..! அண்ணி..! அம்மா சாப்பிட வரச்சொன்னாங்க!"

அவசரமாகக் கண்களைத் துடைத்துக்கொண்டாள் அவள். சரியாக ஹரிணி வரும்போது புன்னகை முகத்துடன் எழுந்து அவளுடன் சென்றாள். திவாகரும் ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் பின்தொடர்ந்தான்.

சாப்பாட்டு மேசைக்கு வந்தபோது, "என்னம்மா வானி..? திவாகரையே கிச்சனுக்கு வரவழைச்சு காபி போட வச்சிட்டியாமே...?" எனக் கிண்டலாக பானு வினவ, வானதியும் ஹரிணியும் சிரித்தனர். வேதாசலம் கூடப் புன்னகைக்க, திவாகர்தான் விளக்கெண்ணெய் குடித்ததுபோல் முழித்தான்.

"வருஷத்துக்கு ஒருதரம் ஒருமாசம் வந்து தங்குவாக, எதுக்கு சிரமம் குடுக்கணும்னு நாங்க யாரும் எந்த வேலையும் சொல்றதில்லை... அதுனாலவே சோம்பேறித்தனம் வந்துடுச்சு போல!"

நீயன்றி வேறில்லை.Where stories live. Discover now