25

839 86 41
                                    

கையில் Geography and Demographics புத்தகத்தை எடுத்துக்கொண்டு, பால்கனியில் முன்னும் பின்னும் நடந்தபடி பூகோளம் படித்துக்கொண்டிருந்தாள் வானதி.

உள்ளே திவாகர் ஏதோ திரைப்படம் பார்க்கும் சத்தம் கேட்டது. சத்தம் அவளுக்குத் தொந்தரவளிக்கக் கூடாதென அவன் குறைத்துத்தான் வைத்திருந்தான். ஆயினும் அவ்வப்போது வரும் பின்னணி ஓசையில் வானதியின் சிந்தனை திவாகரை நோக்கித் திரும்பியது. அதிலும் அமெரிக்க வரைபடம்வேறு அடிக்கடி புத்தகத்தில் வந்தது.

இன்று காலையிலிருந்து ஏனோ மனதில் பாரமாகவே இருப்பதாக உணர்ந்தாள் அவள். திவாகர் அவனது இடைவெளிகளைக் குறைத்துக்கொண்டு அவளிடம் நெருங்கத் தொடங்கியிருந்தது அவளுக்கும் புரிந்தது. ஆனால் அதை ஏன் செய்கிறான் என்பதில்தான் அவளுக்குக் குழப்பம். அதிலும் குன்றின்மீது அமர்ந்திருந்தபோது அவன் பேசியதும் அவளைக் கலங்கடித்தது.

"தெரிஞ்சோ தெரியாமலோ, we are tied in this destiny. So, let's try to live with it."

'உன் விதி இதுதான் என்று இதை ஏற்றுக்கொண்டதால் அமைதியாகிவிட்டாயா திவா? என்மேல் உனக்கு அன்பு ஏதும் வரவில்லையா? என் பழைய திவா எனக்குக் கிடைக்கமாட்டானா? என்னைவிட்டு எல்லோரும் போனதுபோல் நீயும் போய்விடுவாயா? அதற்குமுன் என்னைத் தேற்றுவதற்காக இந்த செயல்களா?'

சிறிதுநேரம் பால்கனியிலேயே அமர்ந்து எண்ணங்களில் மூழ்கியவள், சுவர்க்கோழிகளின் சத்தம் கேட்குமளவு நிசப்தம் பரவியதும் தன்னிலை திரும்பினாள். ஊரெங்கும் இருளில் மூழ்கியிருக்க, பிறைநிலா கருநீல வானில் நீந்திக்கொண்டிருந்தது. நட்சத்திரங்களற்ற அந்த வெற்று வானத்தைப் பார்த்தபோது, அதுபோலவே ஒரு முடிவில்லா இருட்கடலில் தானும் சிக்கியதுபோல உணர்ந்தவளுக்கு மூச்சுத் திணறியது. அதற்குமேல் அங்கே நிற்கமுடியாமல் வேகமாக அறைக்குள் வந்தாள் அவள்.

இங்கோ, திவாகர் கட்டிலில் படுக்காமல், அவள் வழக்கமாகப் படுத்துக்கொள்ளும் சோபாவில் சொகுசாகப் படுத்துக்கொண்டு கால்களை ஒன்றன்மேல் ஒன்றாகப் போட்டிருந்தான். நெஞ்சின்மேல் பாதி மூடிவைக்கப்பட்ட மடிக்கணினி இருக்க, அவளுக்காகவே காத்திருந்ததுபோல் அவன் தலையை சாய்த்துப் பார்த்தான்.

நீயன்றி வேறில்லை.Where stories live. Discover now