34

976 88 40
                                    

"உன் மனசுல என்ன தான் நினைச்சுட்டு இருக்க? ஏன் என்னை எதுவும் சொல்ல வேணாம்னு சொன்ன? இது மட்டுமா? இதுவரைக்கும் என்கிட்ட எத்தனை விஷயத்தை மறைச்சு வச்சிருக்க? ஏன்? ஏன் இப்படியெல்லாம் பண்ற? ஏன் பதில் பேச மாட்டேங்கற? எங்க போயிட்டிருக்கோம் நாம? இப்ப ஏன் ஊருக்குப் போகாம இப்படி ரோட்டுல நடந்துட்டு இருக்கோம்?"

படபடவென அவள் பொரிய, கைகளைக் கட்டிக்கொண்டு அமைதியாக நடந்தான் அவன். மதுரை காவல் நிலையத்திலிருந்து வெளியேறி பிரதான சாலையான மாடவீதியில் நடந்துகொண்டிருந்தனர் இருவரும். பாதிக் கடைகள் அடைந்திருக்க, மீதிப்பேரும் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர். பதில் வேண்டி அவன் முகத்தை பார்த்தாள் அவள். ஆனாலும் நடப்பதை நிறுத்தாதது அவளுக்கே வியப்பாக இருந்தது. ஏனோ உள்மனதில் திவாகரின் பேச்சை அப்படியே கேட்டுவிடலாம் என்றுகூடத் தோன்றியது.

அவளுக்கு அதிகக் குழப்பம் வைக்காமல் ஆய்வாளர் அழகேசனின் கார் அவர்களுக்கு அருகில் உரசுமளவு நெருங்கி நின்றது. ஓட்டுநர் இருக்கையிலிருந்தவர் சினேகமாகப் புன்னகைத்தபடி கதவைத் திறந்துவிட்டார்.

வானதி அவரை வியப்பாகப் பார்த்தாள். கடைசியாக மருத்துவமனையில் பார்த்தது. இப்போது நன்றாகவே தேறியிருந்தார். திவாகரை பரிச்சயமாகத் தெரிந்ததுபோல் தலையசைத்தார். இவளிடமும் திரும்பி, "திருமணத்துக்கு கன்கிராட்ஸ், மிஸஸ் வானதி." என்றார்.

"நீங்க... எங்க இங்க?"

"உங்ககிட்ட இவ்வளவு நாள் மறைச்சதுக்கு சாரி, பட் இந்தக் கேசை நான் மறைமுகமா நடத்திட்டு இருக்கேன். உங்க ஹஸ்பண்ட்டோட உதவியோட."

திவாகரை அவள் நம்பமுடியாத பார்வையுடன் முறைக்க, அவன் திணறினான்.

"வேணும்னு பண்ணல. உனக்கு எக்ஸாம்ல இருந்து கவனம் மாறக் கூடாதுன்னு தான்.. உங்கிட்ட இன்னிக்கு சொல்லத் தான் நினைச்சேன்.. "

"ஆ..மா.. நினைச்சுக்க நல்லா.." என்று வாய்க்குள் முனகிக்கொண்டு பார்வையைத் திருப்பிக்கொண்டாள் அவள்.

நீயன்றி வேறில்லை.Where stories live. Discover now