16

894 89 70
                                    

அவனது கேள்வியில் சட்டெனத் திடுக்கிட்டாள் அவள்.

"என்ன பேசறன்னு தெரிஞ்சுதான் பேசறயா? மாமாவை நான் எதுக்கு சந்தேகப்படணும்? நாற்பது வருஷ நட்பு அது. அதைப்போய் நான் ஏன் களங்கப்படுத்தணும்?"

அவன் பின்வாங்கினாலும், "அ.. அப்றம் ஏன்... அவர்கிட்ட உண்மையை சொல்லாம..?" என்றான் சன்னமாக.

"அட, அதுதான் உனக்குப் பிரச்சனையா? மாமா நெறய இடத்துக்குப் போயிட்டு வர்றவரு. மாமாகிட்ட எல்லா விவரமும் சொன்னா, அவருக்கே தெரியாம அவர் போற இடங்கள்ல அதைப் பேசறதுக்கு வாய்ப்பு இருக்கு. அதன்மூலமா, தெரியக்கூடாத யாருக்காவது இதெல்லாம் தெரியவரும். நாம இதுவரை எல்லாத்தையும் ரகசியமாத்தான் செஞ்சிட்டு இருக்கோம். அதுனால நம்மைத் தவிர யாருக்கும் எந்த ஆபத்தும் வராது."

அவளது நுட்பமான சிந்தனை பிடித்திருந்தாலும், அடுத்ததாக மனதில் வந்தது மற்றொரு கேள்வி.

"அப்ப.. என்னை மட்டும்.. எப்படி நம்பி... எல்லா இடத்துக்கும் கூட்டிட்டுப் போற?"

கண்ணில் வலியோடு அவனை ஒருகணம் பார்த்தாள் அவள்.

"மத்தாப்பூ.. உனக்கு எப்போ, எங்கே போகணும்னாலும் நான் உன்னோடத்தான் வருவேன். எப்பவும் என்னை விட்டுட்டுப் போயிடாத... உன்கூட நானும் நிழல்மாதிரி வருவேன்!"

மறுகணமே பார்வையை மாற்றிக்கொண்டு, "நீயெல்லாம் அவ்ளோ வொர்த் இல்ல. வெளியே யார்கிட்டவும் பேசியே நான் பாத்ததில்லை. நீ வீட்டைவிட்டு வெளியே வர்றதே என்கூட தான். உன்னை சஸ்பெக்ட் லிஸ்ட்ல வச்சா, அது சந்தேகத்துக்கே அவமானம்!" என்றுவிட்டு, தனது மடிக்கணினியில் மூழ்கிப்போனாள் அவள்.

மூக்குடைப்பு இம்முறை பலமாக இருக்க, வாய்க்குள் அவளைத் திட்டிக்கொண்டு, பால்கனிக்குச் சென்று பிரம்பு நாற்காலியில் அமர்ந்தான் அவன்.

'பெரிய்ய ஷெர்லாக் ஹோம்ஸ் தங்கச்சி!!! இன்வெஸ்டிகேஷன் பண்றாங்க! உன்னை மதிச்சு உன்கூட சுத்துறனே, என்னை சொல்லணும்!
டேய் திவா! உனக்கு இதெல்லாம் தேவையா? ஒரு வில்லேஜ் மாங்கா... அவ போய் உன்னை இப்டி மூக்கை உடைக்கறாளே!'

நீயன்றி வேறில்லை.Where stories live. Discover now