17

879 90 33
                                    

திவாகரின் மனதில் அந்தக் கேள்வி உருவானதுமே அவன் அதிர்ந்தான்.

'அவளுக்கு நான் யார்?? யாராக இருந்தால் என்ன? அவளையே மூன்று நாட்களாகத்தான் தெரியும்... இதனிடையில் என்ன ஒட்டுதல்? யார்மீதும் இதுபோல் உரிமை கொண்டு கோபப்பட்டதே இல்லையே நம் மனம்... இப்போது ஏன்?'

எதற்காக இதையெல்லாம் யோசிக்கிறோம் என்று புரியவில்லை அவனுக்கு. அப்போதைக்கு அந்த யோசனையை ஒத்திவைத்துவிட்டு, கண்முன்னால் நடப்பதில் கவனம் செலுத்தினான்.

குறையாத புன்னகையுடன் வானதியை அழைத்துச்சென்று தனது அறையில் அமரவைத்தார் ஆய்வாளர் அழகேசன். பெயருக்கேற்றவாறே இருக்கிறானே என அவனை மேலும் கீழும் ஒரு பொருமலுடன் பார்த்தபடியே வானதியுடன் அமர்ந்தான் அவனும்.

திவாகருக்கு சற்றே ஒல்லியான உடல்வாகுதான் என்றாலும், உடற்பயிற்சி எல்லாம் செய்து தொப்பை சேராமல் கட்டுக்கோப்பாக வைத்திருந்தான் உடலை. ஆனால் இந்த ஆய்வாளரோ அர்னால்டின் அண்ணன்போல கட்டுமஸ்தான தசைகளுடன் இருந்தார். அதிலும் உடலை இறுக்கியதுபோல் போட்டிருந்த காக்கி உடுப்பும், அதிலிருந்து எப்போது வேண்டுமானாலும் தெறித்துவிடத் தயாராக இருந்த பட்டன்களும் திவாகருக்கு கொஞ்சம் பொறாமையைத் தூண்டின.

சில கோப்புகளை படித்துவிட்டு நிமிர்ந்தவர், "நேத்து ஈவ்னிங் இந்த கேஸ் என்கிட்ட வந்தப்போ, இதோட டெவலப்மெண்ட்டைக் கேள்விப்பட்டேன். Good work, Miss Vanathi. உங்களோட சோகமான சூழ்நிலையில் கூட, தெளிவா யோசிச்சு, கேஸ் கையை விட்டுப் போறதுக்கு முன்ன, சரியான நேரத்தில அதை மறுபடி ஓப்பன் பண்ண வச்சிருக்கீங்க.

உங்க குடும்பத்தோட பின்னணி பத்தி நான் கொஞ்சம் ஆராய்ஞ்சு பாத்தேன். ரெண்டு விவசாயிகள், ஒரு ஹோம்மேக்கர். பெருசா எந்த சண்டைகள்லயும் ஈடுபட்டதில்ல. எல்லார்கிட்டவும் நல்ல மரியாதை இருந்திருக்கு.

சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனுக்கு, allegedly, உங்களை ரிசீவ் பண்ணறதுக்காக காரில வந்தப்போ, லாரி, வேன் போன்ற ஏதோ ஒரு வெஹிகில் அவங்க மேல மோதியிருக்கு.ஹைவேஸ்ல நடந்ததால, கண்காணிப்புக் கேமாராக்கள் எதுவும் இல்ல. ஏன், கண்ணால பாத்த சாட்சிகள் கூட இல்லை.

நீயன்றி வேறில்லை.Where stories live. Discover now