39

791 82 34
                                    

வானதி ஏதோ சிந்தனையில் இருப்பதை திவாகர் கரிசனமாகப் பார்த்தான்.
"என்னாச்சு வானி?"

அவள் திவாகரின் கையைப் பிடித்துக்கொண்டு, "ஆரம்பிச்ச இடம்... கரெக்ட்.. ஆரம்பிச்ச இடம்.." என வாய்க்குள் முனக, மற்றவர்கள் குழப்பமாக ஏறிட்டனர்.

"ஆரம்பிச்ச இடம்னா, ஆக்ஸிடெண்ட் ஆன இடம்தான?"

"ம்ஹூம்.. இது எல்லாமே ஆரம்பிச்ச இடம். அப்பாவோட விவசாயிகள் சங்கம். மற்ற ஊர்கள்ல காட்டுக்காரங்க தனித்தனியே விவசாயம் பாக்கறதுனால தான், லாபமோ நஷ்டமோ அவங்க மட்டுமே அனுபவிச்சு, கடன்கள் வாங்கிக் கட்ட முடியாமப்போயி, நிலத்தை விடவேண்டிய சூழ்நிலை வருது. ஆனா அப்பா இதுமாதிரி எதுவும் நடக்கக்கூடாதுன்னு தான் சங்கம் ஆரம்பிச்சு, லாபமோ நஷ்டமோ, எல்லாத்தையும் சரிசமமா பிரிச்சிகிட்டாங்க. அப்படி இருந்தும் விவசாயிக பிளவுபட்டு போயிருக்காங்க... அங்க ஏதோ இடிக்குது. நாம மறுபடி அந்த சங்கத்தைப் பத்தி விசாரிக்கணும்."

சுதாகர் சற்றே தெளிவடைந்த முகத்துடன், "ஓகே.. இப்ப ரெண்டு பாதைகள்... ஒண்ணு மாமா, இன்னொன்னு விக்கி. மாமாவோட சங்கம், விக்கியோட ஆராய்ச்சி. ரெண்டுல ஏதோ ஒண்ணுகூட தான் அந்த எக்ஸ் மினிஸ்டருக்கு தொடர்பு இருக்கு. வானதி, நீயே ரெண்டையும் கவனிக்கறது கஷ்டம். திவா, நீங்க ரெண்டு பேரும் விக்கி கோணத்துல விசாரிங்க. நாங்க மாமாவோட சங்கம், காடு, அதைப்பத்தி விசாரிக்கறோம்." என்றான்.

அதுவரை அமைதியாக இருந்த பானு 'நாங்க' என்ற விளிப்பில் சற்றே திகைத்துச் சிவந்தாள். வானதி அதையும் கடைக்கண்ணால் கவனித்துச் சிரித்துக்கொண்டாள்.

மாலை ஹரிணி வந்ததும், சுதாகரைப் பார்த்ததும் ஆர்ப்பரித்து, "உடன்பிறப்பே!!" என்று கத்திக்கொண்டு அவனிடம் செல்ல, அவனோ வாயைப் பிளந்தான்.

"எப்படி வளர்ந்துட்டா இவ!?"

"ஆங்.. உரம் போட்டு வளர்த்தாங்க! கேள்வியப் பாரு! என்ன வாங்கிட்டு வந்த எனக்காக?"

"ரெண்டு பாட்டில் செண்ட் வாங்கிட்டு வந்தேன், குடிக்கறயா?"

"ஓ.. வாயேன் ஆளுக்கு ஒண்ணு குடிக்கலாம்!"

நீயன்றி வேறில்லை.Where stories live. Discover now