26

961 79 59
                                    

"நான் அமெரிக்கா போகப் போறதில்ல."

தெளிவான யோசனையுடன்தான் அவ்வார்த்தைகளை சொல்லியிருந்தான் அவன். அதைக் கேட்ட கணத்தில் அப்படியே உறைந்து நின்றாள் அவள்.

சலனமின்றித் தலையசைத்துவிட்டு, "ஓ.." என்றுமட்டும் அவள் சொல்ல, அதை அவள் நம்பவில்லை என்பது நன்றாகவே புரிந்தது அவனுக்கு. பால்கனியிலிருந்து அறைக்குள் வந்தவன், "உன்மேல அனுதாபப்பட்டு, பரிதாபப்பட்டு, பாவப்பட்டெல்லாம் நான் இதை சொல்லல வானி. எனக்கு இங்கயே இருக்கணும்போல இருக்கு. ஊருலயே, உன்கூடவே..." என்றான் உருக்கமாக.

எதுவும் பேசாமல் தரையைப் பார்த்தபடியே அவள் நின்றாள்.

"இதுவரை நான் அமெரிக்கா கிளம்பறதுக்கு யோசிச்சதே இல்ல. ஃபர்ஸ்ட் டைமா, எல்லாரையும் விட்டுட்டு அங்க போறதுக்கு தயங்கறேன். எனக்குப் போக விருப்பமில்ல. ஆனா ஒருவேளை நான் இங்க இருந்தா உன்னோட நிம்மதி கெடும்னு நீ நினைச்சன்னா, நான் போயிடறேன். நான் இருக்கவா, போகவா?"

பதிலுக்காக அவளையே பார்த்துக்கொண்டு நின்றான் அவன். அவளோ தன் கால் பெருவிரலை விட்டு விழிகளை அகற்றாமல் நின்றாள். அதற்குமேல் பதில் வராதென நினைத்து அவன் விலகப்போகும் நேரம்...

"இங்கயே இருந்துடு திவா."
சொல்லிவிட்டு நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்து அவள் புன்முறுவல் பூக்க, தன் செவிகளை நம்பமாட்டாமல் அவன் விழிவிரித்துப் பார்க்க, சட்டெனக் கன்னத்தில் சிவப்பேறவும் அதை மறைத்தபடி வெளியே ஓடினாள் அவள்.

அவளது சிரிப்பைக் கண்ணுக்குள் சிறைசெய்தவன், அதில் தான் அடைந்த பேரின்பத்தை நினைத்துப் புன்னகைத்தான். தன் மடிக்கணினியில் தனது நிறுவனத்திற்குக் கடிதமெழுத ஆரம்பித்தான் அவன்.

வானதிக்கோ தன் கால் தரையில் படாத உணர்வு!

நமக்காக, நம்மோடு இருப்பதற்காக, அமெரிக்கா வேண்டாமென்றுவிட்டானே!
அப்படியென்றால்... நம்மைவிட்டுப் போகமாட்டான் நம் திவா! அவனது மனதிலும் நமக்கு ஒரு இடம் உள்ளது!!

நீயன்றி வேறில்லை.Dove le storie prendono vita. Scoprilo ora