23

1K 93 46
                                    

வானதி கலங்கிப்போனாள்.

தான் யாரை இவ்வழக்கின் கலங்கரையாக நம்பினாளோ, அவரே கழற்றிவிட நினைக்கையில், இனி அவள் என்னதான் செய்வாள்? கண்ணைத் துடைத்துக்கொண்டு, அவரை வெறுப்பான பார்வையொன்று பார்த்துவிட்டு வெளியே ஓடினாள் வானதி.

திவாகரும் அவள் நிலையைக் கண்டு அழகேசன்மீது வெறுப்புடன் அவ்விடம்விட்டு எழுந்து செல்ல எத்தனித்தபோது, அவனது கையைப் பிடித்து அருகில் அமரவைத்தார் அவர். சட்டென அவர் இழுக்கவும் திடுக்கிட்டவன், அவரை விழிகளால் வினவ, குரலைத் தாழ்த்திக்கொண்டு தீவிரமான பார்வையுடன் அவர் தொடர்ந்தார்.

"திவாகர், நான் சொல்றதை கவனமா கேளுங்க. இது உங்களுக்கும் எனக்கும் நடுவில மட்டும் இருக்கட்டும். ஏன்னா, இப்போ தான் வானதி உங்களை எவ்வளவு நம்புறாங்கனு நான் கண்கூடாப் பாத்தேன். அவங்களோட பாதுகாப்புமேல உங்களுக்கும் அக்கறை இருக்குன்னு நான் நம்புறேன். அவங்களோட குடும்பத்துக்கு நடந்தது விபத்து இல்லை. திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை. Yes, it is a murder. இதை வானதி இன்னும் விசாரிச்சா, அவங்களையும் கொல்றதுக்கு அவங்க தயங்கமாட்டாங்க. ஆனா, வானதியை கன்வின்ஸ் பண்றது அவ்ளோ ஈஸியான விஷயமா தெரியலை.

நீங்கதான் எப்படியாவது முயற்சி பண்ணி அவங்களை கேசை வாபஸ் வாங்க வைக்கணும். அதுக்காக இந்தக் கேஸ் முடிஞ்சுடுச்சுனு நீங்க நினைக்கவேணாம். நான் unofficialஆ இந்த கேசை நடத்தலாம்னு நினைக்கறேன். எங்க டிபார்ட்மெண்ட்லயே யாரை நம்பறதுன்னு தெரியலை எனக்கு. எனக்கு நேத்து நடந்த ஆக்சிடெண்ட் கூட ஒரு அட்டெம்ப்ட் தான்னு நினைக்கறேன். அதுனால, நம்ம மேல டவுட்சை க்ளியர் பண்ணிக்கறதுக்கு, ஸ்டேஷன்ல வந்து கம்ப்ளெய்ண்ட்டை வாபஸ் வாங்கிக்கங்க.

வானதிக்குத் தெரியாம, இந்தக் கேசோட விசாரணைக்கு உங்க ஹெல்ப்பும் எனக்குத் தேவைப்படும். இதையெல்லாம் நீங்க எனக்காக செய்ய வேண்டாம், வானதிக்காக செய்யுங்க. அவங்க உங்களோட நல்ல ஃப்ரெண்டுதான? அவங்களுக்காக நீங்க இதை செய்வீங்க தானே?"

நீயன்றி வேறில்லை.Where stories live. Discover now