36

1K 87 28
                                    

திவாகரின் ஆர்வமான பார்வைக்கு அர்த்தம் புரியாமல் மலையப்பன் மலைத்து நிற்க, அவனோ வாய்க்கொள்ளாப் புன்னகையுடன், 'உன்னைத் தானே தேடிட்டு இருந்தேன்' என மனதுக்குள் சொல்லியபடி மலையப்பனைத் தோளில் கைபோட்டு அழைத்துக்கொண்டு சாலையோரம் இருந்த டீக்கடைக்குள் நுழைந்தான்.

"டீ சாப்பிட்டுக்கிட்டே பேசுவோம் வாங்க!"

இயல்பாக இரண்டு தேநீருக்குச் சொல்லிவிட்டுப் புன்னகையுடன் அமர்ந்தான் அவன்.

மலையப்பன் தனது ஆட்களை முறைக்க, அவர்களும் செய்வதறியாது திருதிருவென விழித்தனர். வேதாசலத்தின் மகனென்பதால் அவன்மீது கை வைக்கவும் தயங்கினர். மலைப்பனுக்கும் பயந்தனர்.

"என்ன விஷயம்?"
முடிந்தவரை தனது இறுமாப்பை விடாமலிருக்கப் பிரயத்தனப்பட்டான் மலையப்பன்.

சட்டைப்பையிலிருந்து ஒரு அழைப்பு அட்டையை எடுத்து நீட்டி, "இது என் காலிங் கார்ட். வச்சுக்கோங்க. உங்ககிட்ட நான் நிறையப் பேசணும். வானதி கூட உங்களைப் பார்த்தா சந்தோஷப்படுவா." என்றான் திவாகர், சிரிப்புக் குறையாமல்.

அட்டையை வாங்காமல் முறைத்த மலையப்பன், "உனக்கு எங்கிட்ட என்ன பேசணும்? என்ன வேணும் உனக்கு? பெரியவர் மகன்னா, ஒண்ணும் செய்யமாட்டோம்னு நினைச்சுக்கிட்டயோ? உங்கப்பனுக்கும் சேர்த்து உனக்கு செய்வோம்!" என்று கத்த, டீக்கடையில் இருந்தவர்கள் பயத்தில் எழுந்து வெளியேறத் தொடங்கினர்.

திவாகர் அசையாமல் அமர்ந்திருந்தான். முகத்தில் ஒருதுளி பயமில்லை.

"நான் டீசண்ட்டா பேசறேன்.. நீங்க கத்துறீங்க. சரி, அப்ப வேற என்ன வழி..."

மலையப்பனை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தான் அவன். அதற்குள் அவன் கண்ணைக் காட்ட,  பின்னாலிருந்து ஒருவன் அவனை அடிப்பதற்குப் பாய்ந்து வர, கடைசி நொடியில் நழுவி அப்படியே அவனது கையைப் பிடித்துத் திருகினான்.

"Let's not make a scene."

மீண்டும் அவன் பேச முற்பட, அதற்குள் மேலும் இருவர் சண்டையிட வந்துவிட, சலிப்புடன் அவர்களுக்கும் சில டேக்வாண்டோ அடிகளை அளித்துவிட்டு, மறுபடி பேசத் தொடங்கினான். இருந்த ஐந்து பேரையும் அடித்துப் போட்டுவிட்டுத் தனது சட்டையின் கசங்கலை சரிப்படுத்திவிட்டு நின்றான் திவாகர்.

நீயன்றி வேறில்லை.Onde histórias criam vida. Descubra agora