20

896 87 43
                                    

வானதியும் திவாகரும் திகைத்திருக்க, அப்போது காரியதரிசியும் வந்து வேளாண் அதிகாரி அவர்களை அழைப்பதாகச் சொல்ல, யாரிடம் செல்வதென்று புரியாமல் தவித்தனர் இருவரும்.

வானதியே முடிவு செய்யட்டும் என்று திவாகர் அவளைப் பார்க்க, அவளும் ஒரு நெடுமூச்சிற்குப் பிறகு, "நாங்க இப்ப வந்துடறோம்" என்று காரியதரிசியிடம் கூறிவிட்டு, அலுவலகத்திலிருந்து வெளியேறினாள். திவாகரும் பின்தொடர்ந்தான்.

ஆபீஸ் சுற்றுச்சுவருக்குப் பக்கத்தில் நின்றிருந்த அந்த மர்ம ஆசாமி இவர்கள் வெளியே வருவதைப் பார்த்ததும், சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, தன்னுடன் வருமாறு சைகை காட்டிவிட்டு முன்னால் நடந்தான்.

வானதியும் திவாகரும் அவன்பின்னால் நடந்தனர். எவ்வளவு வேகமாக நடந்தும் அவனது நடைக்கு ஈடுகொடுக்க முடியவில்லை அவர்களால். ஒருகட்டத்தில் அவன் ஓடத்தொடங்க, இருவரும் மூச்சிரைக்க அவனைப் பின்தொடர்ந்து ஓடினர். ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அவர்களைக் கூட்டிச்சென்றான் அவன்.

ஓடிய களைப்பில் எதையும் கவனித்திராதவர்கள், அவர் ஏதோ தொழிற்சாலை போன்ற இடத்தில் வந்து நிற்கவும் தாங்கள் எங்கிருக்கிறோமென உணர்ந்து பார்த்தனர். அதற்குள் இவர்களைக் கூட்டிவந்தவன் ஒரு ஷட்டரைத் திறக்க, பத்துப் பதினைந்து ஆட்கள் கையில் கத்தி, கட்டைகளுடன் வெளிவந்தனர்.

வானதி அதிர்ந்துபோய், திவாகரின் கையைப் பிடித்துத் தப்பிப்பதற்காக இழுத்தாள். அவனோ, "வரசொல்லிட்டு ஒண்ணுமே சொல்லாம போயிட்டாரு அந்த சார்? அவர்கிட்ட என்னன்னு கேட்க வேணாமா?" என்றபடி தன் கையை விடுவித்துக்கொள்ள, 'இவனுக்கு இங்கே நடப்பவை எதுவும் புரியவில்லையோ?' என குழப்பமாக அவனைப் பார்த்தாள் வானதி.

"உளறாத திவா. அவனுங்க நம்மை பேசறதுக்கு கூப்பிடல. It's a trap. பக்கத்துல வர்றதுக்குள்ள ஓடிறலாம் வா!"

அவனோ, போலி அதிர்ச்சியுடன், "ஓ... அடிச்சு மிரட்டப் போறாங்களா நம்மளை? அதுக்காத்தான் ஓடவைச்சு கூட்டிட்டு வந்தானா?" என்று கேட்டுக்கொண்டிருக்க, அதற்குள் அடியாள் கும்பல் இவர்களை நெருங்கியிருந்தது.

நீயன்றி வேறில்லை.Donde viven las historias. Descúbrelo ahora