4

1K 94 42
                                    

வானதி..

அவள் வாழ்க்கையை வெறுத்திருந்தாள். துக்கமென்பது வாழ்க்கையில் ஒரு படி என்பது புரிந்தவளுக்குக்கூட அது பேரிடியாய் இறங்கியிருந்தது.

காலை அவள் கிளம்பியபோது மனதில் இருந்த உற்சாகமும் மகிழ்வும் அடையாளம் தெரியாமல் அழிந்து போயிருந்தன.

இரண்டு மணி நேரமாய் ரயில்நிலையத்தில் காத்திருந்தபோதே மனதில் கலக்கங்கள் தோன்றிட, அம்மா, அப்பா, அண்ணன் என மூவரின் கைபேசியிலும் தொடர்பு கிடைக்காமல் போக, இருட்டத் தொடங்கிய நேரத்தில் அங்கே நிற்கப் பிடிக்காமல் பேருந்தும் ஆட்டோவுமாக மாறிமாறிப் பிடித்து, ஊருக்குள் வந்து இறுக்கமான மனநிலையுடன் வீட்டை அடைந்தவளை வரவேற்றதோ பூட்டியிருந்த கதவு.

பக்கத்து வீட்டில் கேட்கையில் நான்கு மணிக்கெல்லாம் கிளம்பி எங்கோ போய்விட்டதாகச் சொல்ல, அப்பாவின் வாட்ஸாப் எண்ணில் கடைசி உபயோக நேரம் ஐந்துமணி எனக் காட்டிட, ஏதோ அசம்பாவிதமெனத் தெரிவித்தது அடிமனது.

அவளது கலக்கத்தைப் பார்த்த பக்கத்துவீட்டு அண்ணன் அவருக்குத் தெரிந்தவர்கள், அங்கே, இங்கேயென விசாரிக்கத் தொடங்க, அவ்வீட்டுப் பாட்டி அவளை அமரவைத்து சாப்பிடவும் குடிக்கவும் தந்தார். ஆயினும் குடும்பத்தினரைப் பற்றி எதுவும் தெரியாதபோது உணவு இறங்கவில்லை. எதிர்பார்ப்போடு அவள் பார்த்திருக்க, பேயறைந்ததுபோன்ற அதிர்வுடன் அந்த அண்ணன் திரும்பிவரவும் இவளுக்கு நெஞ்சைப் பிசைந்தது.

"சரியாத் தெரியல... எதுக்கும் பயப்பட வேணாம்.. சும்மா சந்தேகத்துக்காகத் தான்..." என இழுத்தபடியே அவளை அழைத்துக்கொண்டு வேம்பத்தூர் காவல் நிலையத்துக்குச் செல்ல, அப்போதே கைகள் நடுக்கமெடுக்கத் தொடங்கியது அவளுக்கு.

அங்கிருந்த ஆய்வாளர், "ஹைவேஸ்ல ஒரு ஆக்ஸிடெண்ட் கேசு. அம்மா, அப்பா, பையன். ஸ்ப்பாட் அவுட்டு. பாடியை சிவகங்கை ஜிஹெச்சுக்கு கொண்டு போயிருக்காங்க. அடையாளம் பாத்து வாங்கிக்கங்க" என்க, அது தன் குடும்பமாக இருக்கக்கூடாது என வேண்டாத தெய்வமில்லை வானதி.

நீயன்றி வேறில்லை.حيث تعيش القصص. اكتشف الآن