11

941 89 30
                                    


ஆய்வாளருக்கு நன்றி கூறிவிட்டு அவள் புறப்பட, அவனும் ஒருமுறை அவருக்கு நன்றி கூறிவிட்டு, வானதியுடன் காரில் அமர்ந்தான்.

வாய்வரை வந்துவிட்ட கேள்வியைக் கேட்கலாமா வேண்டாமா எனத் தவித்தான் அவன். அவன் எதையோ மென்றுவிழுங்குவதைப் பார்த்தவள் 'என்ன' என்பதுபோல் புருவத்தைத் தூக்க, "இல்ல... எப்படி... இந்த.. கிரிமினல் விஷயமெல்லாம்... அதாவது... ஆக்சிடெண்ட் இல்லை, மர்டர்னு கண்டுபிடிச்சது எல்லாம்...?" எனக் கேட்டான் திவாகர்.

ஏளனமான புன்னகையுடன், "உலகத்திலயே நீ மட்டும்தான் அறிவாளின்னு நீ நெனைச்சிட்டு இருந்தா, அதுக்கு நான் ஒண்ணும் பண்ணமுடியாது.." என்று சன்னமான குரலில் சொல்லிவிட்டு, ஓட்டுனரிடம் சத்தமாக, "வேம்பத்தூர் போங்க அண்ணே!" என்றாள் அவள்.

ஓட்டுனர் சரிங்கம்மா என்றுவிட்டு காரை வேம்பத்தூர் வழியில் செலுத்தினார்.

"இப்ப ஏன்? வேம்பத்தூருக்கு..?"

மீண்டும் திவாகர் கேட்க, அவள் சலித்து உச்சுக்கொட்டினாள்.

"நான் கண்டுபுடிச்சதை, எந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் வேணாலும் கண்டுபிடிச்சிருக்கலாம். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட், எஃப் ஐ ஆர்- ரெண்டையும் கம்பேர் பண்ணிப் பாத்தாலே, இது விபத்து இல்லைனு புரிஞ்சிருக்கும். ஆனா, பனையூர் இன்ஸ்பெக்டரும் சரி, சிவகங்கை இன்ஸ்பெக்டரும் சரி, எதையுமே பாக்கறதுக்கு முன்னவே கேசை மூடிவைக்க நினைச்சாங்க. அதிலயே தெரியலையா..? இந்த குற்றத்துல, கண்டிப்பா போலீஸ் டிபார்ட்மெண்ட்டில இருக்கறவங்களுக்கும் சம்பந்தம் இருக்கலாம். அவங்கிகிட்ட இருந்து முழு சப்போர்ட்டையும் நாம எதிர்பாக்க முடியாது. நாமளா இறங்கி வேலை செஞ்சாதான், உண்மைய கண்டுபிடிக்க முடியும்."

"ஓ.. அப்போ, உண்மையை தெரிஞ்சுக்கறதுக்கு வேம்பத்தூர்ல என்ன இருக்கு?"

"அங்கதான் இன்னும் என் குடும்பத்தோட ஞாபகங்கள்... அவங்க வாழ்ந்த வாழ்க்கை, விட்டுட்டுப்போன நினைவுகள்... எல்லாமே இருக்கு. எனக்கு எங்க வீட்டைப் பாக்கணும்"

நீயன்றி வேறில்லை.Where stories live. Discover now