சுற்று 1

297 23 23
                                    

🐏ஆடு புலி ஆட்டம் 🐅

சுற்று 1️⃣

இடம் நம் கதையின் நாயகி
"சித்திர வைரத்தின்" இல்லம்....

வீட்டின் நடுவே பூக்களால் அலங்கரிக்கப்பட்ட
இருக்கையின் இரு பக்கத்திலும் இரண்டு குத்து விளக்குகள் சூடேறியப்படி ஒளி வீச...

நாயகியின் இல்லம் விளக்குகளின் ஒளியாலும், பாடல்களின் ஒலியாலும் மெருகேறிக் கொண்டிருந்த தருணம்....

"ஏலே சாமசிவம்,மணி என்னலே ஆகுது... சீக்கிரமா நீ பெத்து போட்ட சண்டாளனை சபையில வந்து உட்கார சொல்லும் ஐயா "..

என வாயில் வெற்றிலையை அடைத்துக்கொண்டு சாமுண்டி தனக்கே உரிய கம்பீரமான குரலில் தன் கணவன் சாம சிவத்திற்கு கட்டளையிட...

நம் நாயகியின் தந்தை 'விரய்யாவின்' சொந்த அக்கா தான் சாமுண்டி என்பது குறிப்பிடத்தக்கது....

'சாமுண்டி,சாமசிவம்'  ஆகிய இருவருக்கும் பிறந்த புதல்வன் தான் நம் கதையின் தேவையில்லாத ஆணி பெயர் 'அகில்'...

இன்றைய தினம்,அகிலுக்கும்.. கதையின் நாயகி சித்ரா @ வைரத்திற்கும் பெரியோர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடக்க ஏற்பாடு செய்த நிலையில்.....

"என்னம்மா.... மணி ஆகுது பாரு,உன் அத்தை வேற வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசிக்கிட்டு நிக்கிறா, சட்டுபுட்டுன்னு ஒரு புடவையை சுத்திக்கிட்டு வந்து சபைல உக்காரு மா வைரம்"...

என்று வைரத்தின் அம்மா 'சத்தியபாமா 'தன் மகளை பார்த்து சொன்னதும்.... அவளை சுற்றி நின்று கொண்டிருந்த இரண்டு தோழிகளில் ஒருவரான சரசு @ சரஸ்வதி....

"அம்மா, நாங்களும் ரெண்டு மணி நேரமா சொல்லிக்கிட்டு இருக்கோம்...ஆனா வைரம் புதுப்புடவையும் கட்டமாட்றா, தலையும் சீவி பூ வெச்சிக்க மாட்டேன்னு சொல்லிட்டா, இவ மனசுல என்னதான்மா நினைச்சுகிட்டு இருக்கா, இவளுக்கு பிடிச்சு தானே உங்க நாத்தனார் மகனை இவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடிவு பண்ணி இருக்கீங்க"...
என்று சரசு கேக்க... பெருமுச்சு விட்ட சத்யபாமா கலங்கிய கண்ணோடு...

🔱யின் 🐏ஆடு புலி ஆட்டம் 🐅Where stories live. Discover now