சுற்று 54

104 16 8
                                    

🐏ஆடு புலி ஆட்டம் 🐅

👉சுற்று 5️⃣4️⃣

💜அனிச்சம் மலர்...

**************************************
👉( Flash Back )

மறுநாள் வார இறுதி நாட்கள் என்பதால்.... மங்கை தன் பையில் துணிகளை எடுத்து வைத்து கொண்டு இருந்தவள்...

அனி - என்ன மங்கை உன் வீட்டுக்கு போறியா..

மங்கை - என் வீட்டுக்கு இல்ல அக்கா... என்னனு தெரியல.... ஜான்சி ராணி மேடம் என்னை பாக்கணும்னு சொல்லிருக்காங்கன்னு ஜான் மாமா சொன்னாரு... அதான் அவங்க வீட்டுக்கு கிளம்புறேன்......

அனி - ம்... மங்க....நான் உன்கிட்ட ஒன்னு கேக்கவா... நீ கோச்சிக்க கூடாது...

மங்கை - அக்கா... நான் உங்கள என்கூட பிறந்த அக்காவா தான் நினைக்கிறேன்.... என்கிட்ட உங்களுக்கு என்ன தயக்கம் கேளுங்க...

அனி - நீ பாக்க அழகா இருக்க... அறிவா பேசுற.. நியாயமா நடந்துக்குற.... சூப்பரா படிக்குற... ஆனா.....

மங்கை - ஆனா என்ன...

அனி - ம்...ஒண்ணுமில்ல..

மங்கை - ப்ச் சொல்லுங்க அக்கா... என்ன கேக்க வந்திங்க...

அனி - இல்ல மங்க.. உன் ஜான் மாமா....

மங்கை - ம் எனக்கு தெரியும் க்கா.... ஜான் மாமாவுக்கு நிறைய கெட்ட பழக்கம் இருக்கு.... அவரு ரொம்ப தப்பு பண்ணுறாரு... இதெல்லாம் எனக்கும் தெரியும்... ஆனா என்ன பண்ண சொல்லுறீங்க... எனக்கு சின்னதுல இருந்து அவரை ரொம்ப பிடிக்கும்.... அந்த நினைப்பு என் மனசுல இருந்து நீங்கவே மாட்டுது.... அவர நான் கல்யாணம் பண்ணி அவர்கூட நல்லதொரு வாழ்க்கையை வாழணும்னு எனக்கு ஆசையா இருக்கு.... So கண்டிப்பா before or after marriage நான் அவர சரி பண்ணிடுவேன்...

அனி - உனக்கு அந்த நம்பிக்கை இருக்கா...

மங்கை - ம் இருக்கு க்கா...

அனி - சரி... அப்புறம் உன் இஷ்டம்...

மங்கை - ம் நானும் உங்கிட்ட ஒன்னு கேட்கனும்...

அனி - என்ன கேக்கணும்... கேளு ...

மங்கை - யாரு அக்கா அந்த ஆதி...

🔱யின் 🐏ஆடு புலி ஆட்டம் 🐅Where stories live. Discover now