சுற்று 16

102 18 4
                                    

🐏ஆடு புலி ஆட்டம் 🐅

👉சுற்று 1️⃣6️⃣

👉குற்றங்களின் முற்று புள்ளி...மரணமே ...??

*************************************************

"ஐயோ அக்கா வேற போன் பண்றா... ஹாஸ்ப்பிட்டல் வேற என்னாச்சுன்னு தெரியல....அவளுக்கு மருந்து வாங்க தான் நான் வெளியே வந்தேன்...கடைசியில உங்ககிட்ட மாட்டிகிட்டு வந்த விஷயத்தை மறந்துட்டேன்.."

என்று மது புலம்பிக்கொண்டே தன் செல்போனை ஆன் செய்து காதருகில்  எடுத்து சென்றவளின் போனை மாயனின் கரங்கள் பிடுங்க.....

மறுமுனையில்....
"ஏய் மாதவி...
எங்கடி போன......
டாக்டர் இன்னும் நீ வரலையான்னு கேக்குறாங்க.. சீக்கிரம் வா.."
என்று அந்த நபர் சொன்ன வார்த்தையை கேட்ட மாயனின் கையில் இருந்த போனை தன்வசம் பிடுங்கிய மது

"ஹலோ அக்கா டாக்டர் கிட்ட சொல்லு.. இன்னும் அரை மணி நேரத்துல மருந்தோட நான் அங்க இருப்பேன்.... நான் வந்த இடத்துல ரெண்டு கூமுட்டைங்கக்கிட்ட மாட்டிக்கிட்டேன்....சீக்கிரம் வரேன் நீ போன வை"...

என்று சொன்ன மது... மாயனை பார்த்து முறைத்தவள்...

"ஹலோ உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா.....அடுத்தவங்க போனை எடுத்து பேசுறீங்களே இது பேருதான் டிபார்ட்மென்ட் ஆளா.....வெளியே போய் நீங்க எல்லாம் போலீஸ்ன்னு சொல்லிடாதீங்க... சின்ன குழந்தை கூட காரி துப்பிடும்..ஆளையம் அவனுங்களையும் பாரு...ஒழுங்கு மரியாதையா வந்து ஜீப்ல இருக்கிற என்னுடைய வண்டியை கீழே இறக்கி குடுங்க.. இல்லை மரியாதை கெட்டுடும்"...

என்று மூச்சு விடாமல் பேசும் மதுவை பார்த்து ஏனோ வசீகரன் வாய் அடைத்து நிற்க...

மாயன் - சரி உங்களுடைய முழு பெயர் என்ன...

என்று மாயன் கேட்டதும்.... தன் கை விரலை கொண்டு மாயன் கண்ணை குறி வைத்தவள்....

மது - ஏன் என் பெயரை தெரிந்து என்னை பொண்ணு கேட்டு கல்யாணம் பண்ணிக்க போறியா... அப்படியே கண்ணை நோண்டிடுவேன்..... ஹலோ கண்ணடிக்காரரே...இந்த ஆளை வந்து என்னுடைய வண்டியை இறக்கி கொடுக்க சொல்லுங்க....எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம்...நான் உடனே என் அக்காவுக்கு மருந்து வாங்கிட்டு போகணும்...

🔱யின் 🐏ஆடு புலி ஆட்டம் 🐅Where stories live. Discover now