சுற்று 67

99 12 8
                                    

🐏ஆடு புலி ஆட்டம் 🐅

👉சுற்று 6️⃣7️⃣

**********************************************

ஒருவர்..."சார் அப்போ உள்ள இருக்கிற பேஷன்ட்க்கு ட்ரீட்மென்ட் கொடுத்து, யாரு என்னன்னு விசாரிச்சு,அவரை உடையவங்க கிட்ட சேர்த்துடலாமா "என்று சொல்லிக் கொண்டிருந்த தருணம்....

ஆபரேஷன் தியேட்டரில் இருந்து இருவர் ஸ்ட்ரக்சரில் அந்த பேஷண்டை தள்ளி கொண்டு வெளியே வந்த தருணம்...பேஷன்ட் முகத்தில் இருந்த வெள்ளை துணி காற்றில் அசைந்து முகத்தில் இருந்து நகர்ந்ததும்...

பேஷன்ட் ஆக இருந்த நபரை பார்த்து மாதவி, சைத்ரா,வசீகரன் என்று மூவரும் ஸ்தம்பித்து போய் நின்றிருந்தனர்...

மாதவி - ஐயோ மாயன்..... இவரு எப்படி இங்க.... என்று இவள் பதற...

வசீகரன் - hey மாயா..... இவன்... இவன் எப்படி இங்க வந்து சிக்குனான்.... சைத்து இங்க ஆம்புலன்ஸ் ரெடி பண்ண சொல்லு....உடனே மாயாவை நம்ம Friends இருக்குற ஹாஸ்ப்பிட்டல்க்கு மாத்தணும்..
என்றவன் மாயனை உடனடியாக JR மருத்துவ மனையில் இருந்து வேறொரு மருத்துவமனைக்கு மாற்றினான்....

கிட்டத்தட்ட பல மணி நேர சிகிச்சைக்கு பின்..... மாயன்னுக்கு மாற்று மருந்து தரப்பட்டு அவனை மயக்கத்தில் இருந்து.. மருத்துவர்கள் கண் விழிக்க செய்தார்கள்...

மாயனின் நிலையை கேள்வி பட்டு... வைரம், ஸ்ரீ, தங்கம் மற்றும் வைரத்தின் அம்மா சத்யா.. வசீகரனின் அப்பத்தா என்று அனைவரும் மருத்துவமனைக்கு வருகை தந்து இருந்தனர்....

மாயனின் நிலையை எண்ணி மாதவி கண்கள் கலங்க.... அவளுக்கு வைரமும், ஸ்ரீயும் ஆறுதல் சொன்னார்கள்...

சைத்ராவும், வசீகரனும் இந்த வழக்கை சட்டப்படி எடுத்து செல்ல முடிவு செய்தவர்கள்.... உடல் உறுப்பு திருட்டுகள் தடுக்கும் சட்டத்துக்கு தேவை படும் ஆவணங்களை எல்லாம் கைபேசி மூலமே தயார் செய்து கொண்டு இருந்த நிலையில்....

Patient கண் விழிச்சிட்டாங்க... நீங்க போய் அவரை பாக்கலாம்.. என்று nurse சொல்ல.... அனைவரும் மாயன் இருக்கும் சிகிச்சை அறையை சூழ்ந்து கொண்டனர்....

🔱யின் 🐏ஆடு புலி ஆட்டம் 🐅Where stories live. Discover now