சுற்று 66

133 15 8
                                    

🐏ஆடு புலி ஆட்டம் 🐅

👉சுற்று 6️⃣6️⃣

***************************************************

"விடுங்க.. என்னை விடுங்கன்னு சொல்லுறேன் இல்ல...
விடுங்க டா.... " என்று ஜான்சி ராணி அறையில் இருந்து ஒரு பெண் அலறும் சத்தம் கேட்டு ஜான்சி ராணி வேகமாக தன் அறைக்குள் ஓட....

அங்கே அந்த பெண் கட்டிலில் படுத்து இருந்தவள்... கண்கள் மூடி... தன் கால் கைகளை உதைத்து கொண்டு உயிர் போகும் வலியை உணரந்தது போல கத்திக்கொண்டு இருந்தவள் அருகில் ஓடி வந்த ஜான்சி ராணி...

hey sweet heart... what happend.... இங்க பாரு... என்னை பாரு...என்று அவளை தன் மடியில் கடத்திக்கொண்டு பதறியவள்... அருகில் இருந்த தண்ணீரை எடுத்து அந்த பெண்ணின் முன் நீட்டி..

J. R - இங்க பாரு baby..... உனக்கு ஒன்னும் இல்ல....இந்தா.. இந்த தண்ணியை குடி...
என்றவள்.... அந்த பெண்ணிடம் தண்ணீரை கொடுக்க...

இல்ல... எனக்கு வேணா... எனக்கு.. எனக்கு பயமா இருக்கு.... என்னை யாரோ துரத்திகிட்டு வராங்க.... என் தலையெல்லாம் வலிக்குது..
என்றவள்.... தன் தலையை பிடித்துக்கொண்டு கண்கள் கலங்கியவளை ஆறுதலாக கட்டிக்கொண்ட ஜான்சி ராணி....

நீ எதுக்கும் கவலை படாத...நீ இங்க படுத்துக்கோ நான் இதோ வரேன்... என்றவள்.... அந்த அறையில் இருக்கும் குளிர் சாதன பெட்டியை திறந்து அதில் இருந்த ஊசியை எடுத்துக்கொண்டு அந்த பெண்ணின் அருகில் வந்ததும்...

அந்த பெண் அவளவாகவே தன் கையை நீட்டி அந்த ஊசியை போடும்ப்படி சொன்னதும்... ஜான்சி ராணி சிரித்த முகத்துடன் அந்த ஊசியை தன்னுடன் இருக்கும் பெண்ணின் கைகளில் செலுத்தியவள்.... அந்த பெண்ணை தன்னோடு இறுக்கமாக கட்டிக்கொண்டு அவளுடன் சேர்ந்து ஜான்சி ராணியும் கட்டிலில் படுத்தவள்.... அந்த பெண்ணின் கூந்தலை அன்பாக வருடிக்கொடுக்க...

எனக்கு ஏன் இப்படி எல்லாம் தோணுது... எனக்கு எதாவது பிரச்சனை இருக்கா.... நான் உங்கள விட்டு செத்து போயிடுவேனா..
என்று அந்த பெண் இயலாமையோடு கேக்க....

🔱யின் 🐏ஆடு புலி ஆட்டம் 🐅Where stories live. Discover now