சுற்று 29

103 18 11
                                    

🐏ஆடு புலி ஆட்டம் 🐅

👉சுற்று2️⃣9️⃣

👉Do You Want Choclate....??

***************************************************

"அக்கா... அக்கா எங்க இருக்க நீ"...
என்று மாதவி கத்தியப்படி வசீகரனின் வீட்டில் உள்ள ஒரு அறையை திறக்க.... அங்கே கைகளும்... வாயும் கட்ட பட்ட நிலையில் அமர்ந்து இருந்த ஸ்ரீயின் கழுத்தில் அழுத்தி பிடித்த கத்தியோடு மாயன் நின்று இருக்க...

"டேய்.... என்னடா பண்ற"....
என்று கத்திய மாதவி.... மாயனை அடிக்க கை ஓங்கியவள் கரங்களை தடுத்த தங்கம்....

"ஏங்க... என்ன நீங்க... ஆம்பளை என்ற மட்டு மரியாதை இல்லாம... என் எதிர்ல என் அண்ணனை கை ஓங்குறிங்க... என்ன உங்கள தட்டி கேக்க இங்க யாரும் இல்லைனு நினைக்கிறிங்களா"...
என்று தங்கம்.... மாதவியை பார்த்து கோவப்பட....

"ஏய்..... இவன் பண்ற வேலைக்கு.... இவனை தூக்கி போட்டு மிதிக்காம.... மடியில தூக்கி வச்சி செல்லம் கொஞ்சவாங்கனு வேற நினைப்பா உனக்கு"...
என்று கடுங்கோபத்துடன் கத்திய மாதவி... ஸ்ரீயின் கை கட்டை கழட்ட போக....

"வெயிட் வெயிட் வெயிட்.... இங்க பாருங்க... உங்களுக்கும் என் மச்சிக்கும் என்ன வேணா பிரெச்சனை இருக்கட்டும்... ஆனா இனிமே நீங்க என் மச்சி கூட தான் இருக்கனும்..... இந்த வீட்டுலேயே இருந்துக்கிட்டு, அவன் கூட நீங்க சண்டை போடுங்க... கொண்டை போடுங்க... ஏன் என் மண்டையில கல்லை கூட போடுங்க.... ஆனா எதுவா இருந்தாலும்.... இந்த வீட்டுல இருந்துக்கிட்டு பண்ணுங்க"....
என்று சொன்ன மாயன்.... ஸ்ரீயின் கை கட்டை இறுக்கமாக கட்டி விட....

மாதவி - டேய் டேய்... யாரு டா நீ.... உன் மச்சிக்காக என்னை சாக சொல்றியா.... அந்த கண்ணாடி காரன் தான் என் கூட பிறந்தவன்னு எப்போ தெரிஞ்சிதோ... அப்பவே நான் அவனை என் கையாள தான் கொல்லனும்ன்னு முடிவு பண்ணிடேன்..... ஆனா என் அக்கா இப்போ இருக்குற நிலைமையில அதெல்லாம் வேணான்னு நானே ஒதுங்கி போறேன்... நீ பாட்டுக்கிட்டு என் மனநிலை புரியாம என்னை சீண்டி பாக்காத.... அப்புறம் பின் விளைவு ரொம்ப மோசமா இருக்கும் சொல்லிட்டேன்..

🔱யின் 🐏ஆடு புலி ஆட்டம் 🐅Where stories live. Discover now