சுற்று 46

123 18 17
                                    

🐏ஆடு புலி ஆட்டம் 🐅

👉சுற்று 4️⃣6️⃣

💜விளையாட்டு வினையாகும்....

**************************************

வைரம் மனதளவில் குழம்பிய நிலையில் இருந்தவள்..... அனகா மீது கோவத்தை மீறி பயத்தில் தான் இருந்தாள்....

வைரம் - என்ன இந்த அனகா.... ஏன் இப்படி நம்மள பயமுறுத்துற மாதிரி பேசுறா.....
நம்ம மாதவி என்னமோ....அந்த AG ஒரு விபத்துல இறந்துட்டான்னு சொல்லுறா..ஆனா அன்னைக்கு அந்த AG என்னவோ... Baby bobby ன்னு என்கிட்ட போன்ல பேசினான்.....ம்... இதுல எது உண்மை......
பேசாம நம்ம வஷிகிட்ட சொல்லலாமா...
.
.
வைரம் - ஹ்ம் ஹ்ம் வேணா வேணா... நம்ம இப்போ வசீகரன் பொண்டாட்டி..நம்மளே இந்த அனகாவையும் AG யையும் ஒரு கை பார்ப்போம்..

என்று தனக்குள் எண்ணியவள்... இந்த விஷயத்தை.... தன் ஆசை கணவன் வசீகரனிடம் சொல்ல கூடாது என்று முடிவெடுத்தாள்...

***************************************************
மறுபக்கம்....
ஜான்சி ராணி வீட்டில் இருந்து வெளியே வந்த வசீகரனை நோக்கி...
" என்னை காப்பாத்துங்க
கரன் Pls "....என்று ஓடி வந்த யாழினியை.....தூரத்தில் இருந்து குறி பார்த்து தன் துப்பாக்கியை கொண்டு ஜான்சி ராணி யாழினி காலில் சுட்டதும்..... வலி தாங்காமல் யாழினி துடிதுடித்து கீழே விழுந்தவளை கண்டு..... வசீகரன்,மாதவி, மாயன் என்று மூவரும் அதிர்ச்சியுடன் பார்க்க.....

"ராதா.... ம்".......
என்று தூரத்தில் நின்று இருந்த ஜான்சி ராணி... சைகை காட்டியதும்....ராதா ரவி ஏவிய ஆட்கள் குண்டடி பட்ட யாழினியை நாலு பேர் பங்களாவின் பின் புறம் தூக்கி செல்ல....
அவர்களை அடிக்க சென்ற வசீகரனை தடுத்த மாதவி...

"நமக்கு இப்போ இது தேவை இல்லாத வேல.... வா போகலாம்"...என்றாள்

வசீகரன் - ஏய்.... நம்ம கண் எதிர்ல ஒரு பொண்ணை துடிக்க துடிக்க சுட்டு தூக்கிட்டு போறாங்க...என்னனு கேக்க போற என்னை நீ ஏன் தடுக்குற...

மாதவி - வேணா... நீ வா நம்ம போகலாம்

மாயன் - ஆமா மச்சி.... உன் தங்கச்சி சொல்றது தான் சரி... நம்ம இப்போ இங்க இருந்து கிளம்புறது தான் நல்லது வா.....

🔱யின் 🐏ஆடு புலி ஆட்டம் 🐅Where stories live. Discover now