சுற்று 55

97 18 4
                                    

🐏ஆடு புலி ஆட்டம் 🐅

👉சுற்று 5️⃣5️⃣

💜அனிச்சம் மலர்...

**************************************

👉( Flash Back )

அனிச்சம் பூவின் இதழ்களை களவாடி ஆழ்ந்த முத்தத்தை அவளுக்கு பரிசலித்த ஆதியின் செயலில் தன்னிலை மறந்து அவனை இறுக்கமாக தன் மார்போடு கட்டிக்கொண்டவள்.... ஆதியின் அன்புக்கு... தன் ஆதி முதல் அந்தம் வரை அவனுக்காக அள்ளி தர ஆசை கொண்டவளின் எண்ணதுக்கு தடையாக....மேசை மேல் இருந்த அனிச்சம் பூவின் கைபேசி சிணுங்க.....

கைபேசியின் திரையில்
"தாரா "என்ற பெயர் ப்ரதிபலிக்க.......சட்டென்று ஒருவரை ஒருவர் சுதாகரித்து கொண்டு அவர்கள் பிடியில் இருந்து தன்னை விடுவித்து கொண்டனர்...

ஆதி - சா... சாரி honey...

அனி - 🥰எதுக்கு சாரி...

ஆதி - லிமிட் கிராஸ் பண்ணக்கூடாதுன்னு தான் நினைச்சேன்... ஆனா உனக்கு இப்படி ஒரு முத்தம் கொடுக்கணும்னு எனக்கு ரொம்ப வருஷமாவே ஒரு ஆசை..

அனி - இப்ப அந்த ஆசை தீர்ந்துச்சா...

ஆதி - ஹ்ம் ஹ்ம்... நமக்கு 80 வயசு ஆகும் போது கூட... நான் உன் மேல கொண்ட இந்த அன்பும் ஆசையும் தீரவே தீராது...

என்றவன்... மேலும் அனிச்சம் பூவை தன் இதயத்தோடு இணைத்து கொள்ள....அவளோ தன் வசமிருந்து அவனை தள்ளியவள்....

அனி - சார்.... ஆனாலும் உங்களுக்கு ரொம்ப ஆசை தான்.... சரி சரி... இந்த நேரத்துல யாரு போன் பண்ணாங்கன்னு பாருங்க..

ஆதி - உன் போன் தான் ரிங் ஆகிருக்கு....

அனி - ம்..ஆமா என் போன் தான்.. பட் யாருன்னு பாருங்க..

ஆதி - ம்... தாரா சிஸ்டர்ன்னு போட்டுருக்கு...

அனி - என்ன தாராவா.... அவ ஏன் இந்த நேரத்துல கூப்பிட்டு இருக்காள்.

ஆதி - வேற யாரையாவது கூப்பிடுறதுக்கு பதிலா உன்னை கூப்பிட்டு இருக்காங்களா..

அனி - தெரியலையே... சரி போனை தாங்க... நான் அவளுக்கு call பண்ணுறேன்..

🔱யின் 🐏ஆடு புலி ஆட்டம் 🐅Where stories live. Discover now