சுற்று 41

132 22 9
                                    

🐏ஆடு புலி ஆட்டம் 🐅

👉சுற்று 4️⃣1️⃣

💜வஷியுடன் வைரம் சங்கமம்...

***************************************************

"இனி நான் உங்க பொண்டாட்டி வஷி... நீங்க எங்க இருக்க சொன்னாலும் நான் அங்க இருப்பேன்.... இனி நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்....
என் அப்பா,
அத்த,
என் அத்த மகன்... என்று யாருக்கும் நான் பயபுட மாட்டேன்...
ஏன் அந்த AG kku கூட நான் பயபுட மாட்டேன்"...
என்று வைரம் சொல்ல..

"என்ன AG யா.... என்னடி சொல்ற....?? என்று வசீகரன் கேக்க.... அதே சமயம் ஹோட்டல் வாசலில் நின்று இருந்த வசீகரனின் ஜீப்பை முகமூடி அணிந்து இருந்த ஒருவன் அடித்து நொறுக்குவதை பார்த்த வசீகரன் வாசலை நோக்கி ஓடியவனை அந்த முகமூடி அணிந்து இருந்த நபர் கத்தியை கொண்டு குத்த வருவதை பார்த்து வைரம்....

"வஷி"... என்று கத்த....
அதே சமயம்...
ஹோட்டல் வாசலில் ஆறடி உயரத்தில் உள்ள mickey mouse பொம்மைக்குள் மறைந்து இருந்த நபர்.. தன் கையில் இருந்த திறவியத்தை வைரத்தின் முகத்தில் வீச....

"வஷி"..... என்று மீண்டும் அலறிய வைரம்.... தன் முகத்தை மூடிய நிலையில் அதே இடத்தில் மயிங்கி கீழே விழுந்தவளை கண்ட வசீகரன்..
தன்னை குத்த வரும் கத்தியை பிடித்தவன்... முகமூடி அணிந்து இருக்கும் நபரின் கழுத்தை சுற்றி வலைத்த தருணம்....

மயங்கி விழுந்த வைரத்தை பார்த்து.. தன் கையில் அகப்பட்டு இருந்த முகமூடி அணிந்து இருந்த நபரை விடுவித்த வசீகரன்.... வைரத்தை நோக்கி ஓடியவன்...

"hey ரம்மு... என்னாச்சு டி உனக்கு.... என்னை பாரு டி".... என்று அலறியவன் கையில்.. அருகில் இருந்த ஒருவர் தண்ணீர் பாட்டிலை தந்ததும்.... வசீகரன்... தன் காதல் மனைவி முகத்தில் தண்ணீரை தெளித்ததும்... வைரம் கண்கள் மலர்ந்தவள் அருகில் இருந்த வசீகரனை பார்த்தும்... பயந்த நிலையில் அவன் கழுத்தை இருக்கி கட்டிக்கொண்டு கண்கள் கலங்கியவள்...

"வஷி......
வஷி...... உங்களுக்கு ஒன்னும் ஆகலையே....
உங்கள யாரோ...
யாரோ உங்கள கத்தியில குத்தி...
யாரோ என் முகத்துல என்னமோ ஊத்துனாங்களே... ஐயோ என்ன வஷி... நமக்கு என்னாச்சு"...
என்று வைரம் பயத்தில் பிணர்த்தியவளை சமாதானம் செய்யும் விதமாக வசீகரன் அவன் நெற்றியில் இதழ் பதித்து..

🔱யின் 🐏ஆடு புலி ஆட்டம் 🐅Where stories live. Discover now