சுற்று 42

184 19 13
                                    

🐏ஆடு புலி ஆட்டம் 🐅

👉சுற்று 4️⃣2️⃣

💜மீண்டும் வஷியுடன் வைரம் சங்கமம்...

***************************************************

வசீகரன் தன் கண்களை திறந்தவன் வைரம் மூச்சு முட்டும் நெருக்கத்தில் நெஞ்சில் முகம் புதைத்து உறங்குபவளையே சில நொடி பார்த்தவனுக்கு அவனை மறந்து இதழ்கள் மலர்ந்தது....

இதழ் அழகாய் விரிய தன் மார்பில் தலை வைத்து உறங்கும் வைரத்தின் காதோரம் உறவாடிய கூந்தலை ஒதுக்கி விட்டு கண் எடுக்காமல் அவள் அழகை ரசித்தான்......

பெரிய கட்டிலாக இருந்தாலும் வைரம் விழுந்து விடுவாளோ என்ற எண்ணத்தில் அவள் இடையில் கை பதித்து அவள் பக்கம் திரும்பி படுத்த வசீகரன்... பிறந்த மேனியாக... தன்னிடம் அவள் பெண்மையை தந்த வைரத்தை எழுப்ப நினைக்கவில்லை..

இந்த ஜென்மம் முழுதும் இவள் நெருக்கத்திலே இவன் வாழ வேண்டும் என்று ஆசை கொண்டான்....

மெல்ல கண்கள் திறந்த வைரம்..... வசீகரனை வியந்து போய் பார்த்துக்கொண்டு இருந்தவளின் இதழ் ஓரத்தில் உள்ள சிறு காயத்தை கண்டு சிரித்தவன்.....

தூங்கு டி...என்றான் அவள் இதழ்களில் தன் விரல் பதித்து...

கனவுல கூட இப்படி பாத்துகிட்டு இருந்தா எங்க இருந்து தூங்குறாதம்... என்று தூக்கத்தில் புலம்பியவளை பார்த்து வசீகரன் அழகாய் சிரித்தவன் ...

அவளை மேலும் அருகில் அணைத்து கொண்டவன் அவள் இதழை தன் அதரங்கள் கொண்டு இதமாக முத்தமிட்டவன் ...மேலும் அவளின் வெற்றிடையை தன் உடலோடு இணைத்து கொண்டதும் தான்..வைரம் தன் தூக்கம் கலைந்து இது கனவில்லை தன் கணவன் கட்டில் மேல் ஆடும் ஆடு புலி ஆட்டம் என்ற கூற்றை உணர்ந்தவள்...அவன் பிடியில் அகப்பட்டு இருந்த தன் அங்கங்களை எல்லாம் அதிரடியாக போர்வையை கொண்டு மறைத்து கொண்டாள்...

முழுக்க நனைந்த பின்னாடி முக்காடு எதுக்கு டி என் வைர பொண்டாட்டியே.. என்றவன்.... அவள் மீது இருந்த போர்வையை பறித்து தூர வீசயவன்...பேதையின் கட்டுடல் மேனியில் இவன் போதையின் உச்சத்தில் கட்டுமரமாக  மிதக்க ஆரம்பித்தவன்....தன்னவளின் சுவரிசத்தை ரசித்தப்படி...

🔱யின் 🐏ஆடு புலி ஆட்டம் 🐅Where stories live. Discover now