சுற்று 32

115 20 3
                                    

🐏ஆடு புலி ஆட்டம் 🐅

👉சுற்று3️⃣2️⃣

👉 மின்னும் வைரம் ...??

***************************************************

யாமினி இறந்த தலைப்பு செய்தியை...
ஒரு பக்கத்தில் இருந்து X மினிஸ்டரின் மகன் ஜானுடன் சேர்ந்து மது @ மாதவியும்.....

மறுபக்கத்தில் இருந்து
அக்னி @ ஆனந்த நாராயணன்...
& தினேஷ் @ ஆதியும்
தொலைக்காட்சி மூலம் பார்த்து கொண்டு இருக்க...

"என்ன மச்சான்... இங்க என்ன நடக்குது.... எனக்கு மண்டையே வெடிக்கிற மாதிரி இருக்கு".... என்று தன் தலையை பிடித்து கொண்டு சோபாவில் அமர்ந்தான் அக்னி....

"எனக்கும் ஒன்னும் புரியல மச்சான்... இந்த அனா வேற இப்போன்னு பார்த்து டெல்லி கிளம்பி போயிட்டா...இங்க என்னடானா... நம்ம சென்னையில தாராவையும், கர்நாட்டாக்கால லில்லியையும் ஸ்கெட்ச் போட்டு தூக்கினது போலவே... யாமினியை யாரோ போட்டு தள்ளி இருக்காங்க... பட் யாரு இத பண்ணி இருப்பாங்க... அதுவும் அந்த ஜான் கெஸ்ட் ஹவுஸ்ல யாமினியின் சடலம் கிடைத்து இருக்கு...So இதுல வேற யாரோ சம்மந்தம் ஆகி இருக்குற மாதிரி தெரியுது"....
என்று தன் பங்குக்கு குழம்பினான்... தினேஷ் @ ஆதி....

"மச்சான்.. நீங்க ஒன்னு பண்ணுங்க ... அந்த சிபிஐ ஆஃபீஸ்ர் கரனை போய் பாருங்க ....அவர்கிட்ட பேச்சு கொடுத்தா .. கண்டிப்பா இந்த கேஸ் detials நமக்கு தெரிய வரும்"...
என்று ஐடியா தந்தான் அக்னி...

"ம்... அதுவும் சரி தான்.... நான் அவரை போய் பாக்குறேன்... and நீங்க கூட உங்க பத்திரிகை Side ல யாமினியை யாரு கொன்னு இருப்பாங்கன்னு விசாரணை பண்ணுங்க"...என்றான் தினேஷ் @ ஆதி...

"ஏன் மச்சான்... ஒரு வேள... உண்மைக்கே ஜான் தான் யாமினியை போட்டு தள்ளி இருப்பானா"... என்று மீண்டும் தன் சந்தேகத்தை வலுப்படுத்தின்னான் அக்னி...

"அவன் பண்ண கூட வாய்ப்பு இருக்கு மச்சான்....இவளுங்க ஒரு பண பேய்ங்க... இவளுங்க எல்லாம் சேர்ந்து அந்த ஜானை மிரட்டி இது வரை கோடி கணக்குல பணம் வாங்கி இருக்காளுங்க..... So அதே மாதிரி மறுபடியும் அவனை மிரட்டும் போது... அவனே யாமினியை போட்டு தள்ளிட்டு... சைக்கோ கொலைக்காரன் பெயரை யூஸ் பண்ணிட்டான் போல"... என்று தன்னுடைய கண்ணோட்டத்தை சொன்னான் தினேஷ் @ ஆதி.....

🔱யின் 🐏ஆடு புலி ஆட்டம் 🐅Where stories live. Discover now