சுற்று 50

100 19 0
                                    

🐏ஆடு புலி ஆட்டம் 🐅

👉சுற்று 5️⃣0️⃣

💜அனிச்சம் மலர்...

**************************************

👉( Flash Back )

மறுநாள் காலை.... அனிச்சம் பூ முதலில் படுக்கையில் இருந்து எழுந்தவள்... தன் செயற்கை கால்களின் உதவியோடு கட்டிலில் இருந்து எழுந்து... தன் பக்கம் படுத்து இருக்கும் தாராவிற்கு போர்வையை போர்த்தியப்படி அங்கிருந்து தன் அறைக்கு வந்தாள்...

அங்கே இவள் அறையின் வாசலில் சுத்தம் செய்து கொண்டு இருந்த பஞ்சவர்ணம்..

என்ன பாப்பா...நீ தாரா அம்மா ரூம்லயா தூங்குன... என்று கேட்க்கும் போதே...பஞ்சவர்ணத்தின் முகம் மாறி இருந்தது...

ஆமா....நான் தாரா ரூம்ல தான் தூங்கினேன்... பாவம் அவ தான் என்னை அவளோட சகோதரி போல அன்பா பார்த்துகிட்டா... அவளோட friends எல்லாம் எங்கேயோ வெளியூர் போறோம்ன்னு சொல்லியும் கூட... தாரா எனக்காக இங்கேய இருந்துட்டா... என்று அனிச்சம் பூ சொன்னதும்..... பஞ்சவர்ணம்... மனதிற்குள் ஏதோ சரியில்லையே என்ற எண்ணம் தோன்ற.....

என்னாச்சு... என்ன யோசிக்கிறீங்க... என்று கேட்டாள் அனிச்சம் பூ...

பாப்பா... சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதம்மா இவங்க எல்லாம் பணக்கார வீட்டு பிள்ளைங்க.. ஆட்சியும் அதிகாரமும் பண பலமும் இருக்கிற மமதையில இவங்க என்ன வேணும்னாலும் பண்ணுவாங்க..எதுக்கும் நீ இவங்க கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இரு தாயி...
என்று பஞ்சவர்ணம் சொல்ல...

என்ன திடீர்னு இப்படி எல்லாம் பேசுறீங்க.. ஏதாவது பிரச்சனையா..எதுவா இருந்தாலும் சொல்லுங்க..எனக்கே முந்தா நேத்து நைட்டு அந்த பங்களாவில் நடந்த விஷயங்களையெல்லாம் பார்த்ததில் இருந்து மனசு ஒரு மாதிரி இருக்கு...
என்று அனிச்சம் பூ மீண்டும் முந்தைய தின இரவு பாலடைந்த பங்களாவில் நடந்த சம்பவங்களை நினைத்து அச்சம் கொள்ள..

என்னம்மா சொல்ற..அப்போ நீ அந்த பங்களாக்குள்ள போய் பார்த்தியா அப்படி அங்க என்னதான் நடக்குது.. என்று பஞ்சவர்ணம் கேக்க..

🔱யின் 🐏ஆடு புலி ஆட்டம் 🐅Where stories live. Discover now