1 இதயத்துடிப்பு

6.3K 111 12
                                    

1 இதயத்துடிப்பு

தன் கையில் இருந்த கடிதத்தை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான் அர்ஜுன். அது அவன் அம்மா அவனுக்கு எழுதிய கடிதம். கண்ணிலிருந்து இடைவிடாமல் பெருகும் கண்ணீரை துடைத்தபடி இருந்தான் அவன்.

"என் இதயம் உனக்காக எப்பொழுதும் துடித்துக் கொண்டே இருக்கும்"

என்று அவன் அம்மா எழுதிய வரிகளை, நாற்பத்தி இரண்டாவது முறையாக படித்தான் அவன்.

இன்று காலை அவனுக்கு ஒரு செய்தி வந்தது. "அவனுடைய அம்மாவின் இதயம் துடிப்பதை நிறந்தரமாக நிறுத்தி விட்டதாக". இன்று காலை அவர் ஒரு விபத்தில் காலமானார். லண்டனில் இருந்து தனி விமானத்தின் மூலம் அவன் இந்தியாவிற்கு வந்து கொண்டிருக்கிறான், அவன் அம்மாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக.

அர்ஜுன், எப்பொழுதும் தன் அம்மாவிடமிருந்து பிரிந்திருக்க நினைத்ததில்லை. ஏனென்றால், அவர்களுக்கு வேறு யாரும் துணையில்லை. அப்படி இருந்த போதிலும், அவனுடைய அம்மா, அவன் இந்தியா வருவதற்கு எப்பொழுதும் அவனை அனுமதித்ததில்லை. அவனுடைய முரட்டு சுபாவமே அதற்கு காரணம். எப்பொழுதெல்லாம் அவன் தன் அப்பாவை பார்க்கிறானோ, அப்போது அவன் தன்னிலை இழந்துவிடுவது வழக்கம். வேறு ஒரு பெண்ணிற்காக தன் அம்மாவிற்கு துரோகம் இழைத்தவர் ஆயிற்றே அவர்...!

அவனுக்கு பன்னிரண்டு வயதான பொழுது, அவனுடைய அம்மாவிற்கு தெரிய வந்தது, அவருடைய கணவர் அவரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என்று. அவனுடைய அம்மா சீதாராணி, அவர் கணவன் மீது உயிரையே வைத்திருந்தார். அவருடைய கணவர் தான் அவருக்கு எல்லாம்... அவருடைய பலம், பலவீனம், அனைத்துமே அவரது கணவர் தான்.

தன் கணவனைப் பற்றிய உண்மை தெரிந்த பொழுது அவர் நொறுங்கிப் போனார். தன்னுடைய தூய்மையான அன்பிற்கு தன் கணவர் தகுதியில்லாதவர் என்பதை அவரால் நம்பவே முடியவில்லை. அந்த ஏமாற்றத்தில் இருந்து வெளிவர முடியாமல் தவித்தார். உடைக்கப்பட்ட அவரது நம்பிக்கை,, p அவரை பலவீனமாக்கியது. எப்பொழுதும் அழுது கொண்டே இருந்தார்.

இதய சங்கிலி (முடிவுற்றது )Where stories live. Discover now