Part 40

1.5K 94 9
                                    

பாகம் 40

பஞ்சரான டயரை பார்த்து எரிச்சலடைந்தான் அர்ஜுன். அந்த இடம், ஆள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது. யாராவது வருகிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தான் அர்ஜுன். காரை விட்டு கீழே இறங்கினாள் இந்து.

"அடக் கடவுளே... என்னால தான் நீங்க இந்த காட்டுல வந்து மாட்டிக்கிட்டிங்க"

" டயர் பஞ்சர் ஆகிறது எல்லாம் சாதாரணமா நடக்கிற விஷயம் தான். நானும் இந்தியா வந்ததிலிருந்து இங்க வரணும்னு தான் நெனச்சுக்கிட்டு இருந்தேன். அதனால உன்னை பிளேம் பண்ணிக்காத."

அப்பொழுது, ஒரு ஆள் சைக்கிளில் அந்தப் பக்கம் வந்தான். தன் கையைக் காட்டி அவனை நிறுத்தினான் அர்ஜுன். வந்த ஆள், அர்ஜுனுடைய காரை, வாயை பிளந்து கொண்டு பார்த்து நின்றான்.

" இங்க பக்கத்துல ஏதாவது மெக்கானிக் ஷாப் இருக்கா?"

"பக்கத்துல இல்லங்க... ஊருக்குள்ள தான் இருக்கு."

" இங்கிருந்து எவ்வளவு தூரம்?"

"அஞ்சு கிலோமீட்டர் போகணும்"

" உங்ககிட்ட அந்த மெக்கானிக் நம்பர் இருக்கா?"

" இல்ல சார் "

" அவரை இங்க கூட்டிட்டு வர முடியுமா?"

"நானா?" என்று அவன் தயங்கினான்.

தனது மணி பஸ்ஸில் இருந்து 500 ரூபாய் நோட்டை எடுத்து அவனிடம் நீட்டினான் அர்ஜுன். அதைப் பார்த்து அந்த மனிதனின் முகம் மின்னியது. அர்ஜுனின் கையிலிருந்து அதைப் பறித்துக் கொண்டான்.

"மெக்கானிக்கை இங்க கூட்டிட்டு வந்தா, இன்னொரு 500 ரூபாய் தரேன்" என்றான் அர்ஜுன்.

" நான் போய் கூட்டிட்டு வரேன் சார்" என்று தன்னுடைய சைக்கிளை போட்டியில் கலந்து கொள்பவனை போல் அதிவேகமாய் ஓட்டிச் சென்றான்.

காரின் மீது சாய்ந்து கொண்டு நின்றான் அர்ஜுன். ஊருக்குள் சென்ற மனிதன், மெக்கானிக்கை அழைத்து வரும் வரை இங்கு தான் காத்திருந்தாக வேண்டும். வேறு வழி இல்லை. அந்த அமைதியான சூழ்நிலை அர்ஜுனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

இதய சங்கிலி (முடிவுற்றது )Where stories live. Discover now