3 விளம்பரம்

2K 94 6
                                    

3 விளம்பரம்

இந்து குமாரின் புகைப்படத்தை பார்த்தபடி அமர்ந்திருந்தான் அர்ஜுன். அவனுக்குள் புதிதாய் ஏற்பட்டிருக்கும் உணர்வுகளை அவனாலேயே புரிந்துகொள்ள முடியவில்லை. அவன் எப்பொழுதும் இது போல் இருந்ததில்லை. அவன் அம்மாவின் இதயத்தை அவள் கொண்டிருக்கிறாள் என்பதற்காகத் தான் அவளைத் தேடிப் பிடிக்க நினைத்தான். ஆனால், இப்பொழுது, அந்த பெண்ணை பார்த்ததற்கு பிறகு, அவனுடைய மனதின் எண்ண ஓட்டத்தின் மீது அவனுக்கே சந்தேகம் ஏற்பட்டிருந்தது.

அவள் புகைப்படத்தை தன் கட்டை விரலால் மெல்ல வருடினான். அவள் அவனுக்கு வேண்டும். எப்பொழுதும் அவள் அவனுடன் இருக்க வேண்டும். அவளுக்கு அதில் விருப்பம் இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி அவன் கவலை படவில்லை. அவள் அவனுடன் இருந்து தான் தீர வேண்டும். அவளுக்கு வேறு வழியில்லை. ஏனென்றால், அவள் அவனுடைய அம்மாவால் தேர்ந்தெடுக்கப்பட்டவள்.

அவனுடைய அம்மா எப்போதும் கூறுவார், *காரணம் இல்லாமல் எதுவுமே நடப்பதில்லை* என்று. அதைப் போலத் தான், இந்துகுமாரி அவனுடைய அம்மாவின் இதயத்தை பெற்றதற்கும் ஏதோ ஒரு காரணம் நிச்சயம் இருக்கும் என்று அவன் நம்பினான்.

பாண்டிச்சேரி

கிரி மட்டுமல்ல, அவனுடைய ஆட்களும் பாண்டிச்சேரி முழுவதும் இந்துகுமாரின் புகைப்படத்தை கையில் வைத்துக்கொண்டு, அலையோ அலையென்று அலைந்து கொண்டிருந்தார்கள். பாண்டிச்சேரியில் இருந்த மூலை முடுக்கெல்லாம் அவளைத் தேடி திரிந்தார்கள். பாண்டிச்சேரியில் வசிப்பது என்னவோ மூன்றறை லட்சம் பேர் தான் என்றாலும், பத்தொன்பதரை கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது பாண்டிச்சேரி. ராம் லாட்ஜின் பெண் கூறிய கீழுர் மொத்தமும் அலசியாகிவிட்டது. ஆனால், இந்துகுமாரியை பற்றி எந்த விவரமும் தெரியவில்லை. ஆனால் கிரிக்கு வேறு வழியும் இல்லை. அவன் எப்படியும் அவளை தேடி கண்டுபிடித்து தான் தீரவேண்டும். *முடியவில்லை* என்றோ *கிடைக்கவில்லை* என்றோ, ஒரு பதிலை அவன் அர்ஜுனிடம் சொல்லிவிட முடியாது.

இதய சங்கிலி (முடிவுற்றது )Where stories live. Discover now