Part 51

1.4K 91 8
                                    

பாகம் 51

நீதி மன்றம்

"யுவர் ஹனார், எங்க அம்மா தான் எங்க அண்ணனுடைய வாழ்க்கையை நாசப்படுத்தினாங்க. அவரோட அப்பாவை பறிச்சி, அவங்க அம்மாவை தனியாக்கினாங்க. அவங்க அதோட திருப்தி அடையல. எல்லா விதத்திலேயும் எங்க அண்ணனுடைய சந்தோஷத்தை கெடுக்க முயற்சி பண்ணாங்க. எங்க அண்ணனையும் அண்ணியையும் கொல்ல ஆள் அனுப்பினாங்க. அவங்க சாப்பிட்ட சாப்பாட்டுல அந்த ஆள் விஷத்தை கலந்துட்டான்... அது எல்லாருக்கும் தெரியும். கடைசியில, அண்ணியை கொல்ல, ஒரு ஷுட்டரை அனுப்பினாங்க. அப்பா, சொல்ல முடியாத மன அழுத்தத்தில் இருந்தார். மொத்தமா அமைதியை இழந்திருந்தாரு. அவரால தான் எங்க அண்ணன் நிம்மதி இல்லாமல் இருக்கார் என்கிற குற்ற உணர்ச்சி அவரை கொன்னுகிட்டிருந்தது. எங்க அண்ணனை அழிக்க எங்க அம்மா செய்த கருணையில்லாத செயல்கள் அவரை ரொம்பவே கஷ்டப்படுத்திச்சி. அதனால தான், பார்ட்டியில் அவங்களை பார்த்த உடனே, அவர் நிதானம் இழந்துட்டாரு. எங்க அம்மா நல்லவங்க இல்ல. அவங்க உயிரோட இருந்திருந்தா, எங்க அண்ணனையும் அண்ணியையும் நிச்சயம் கொன்னிருப்பாங்க" என்று கூறி முடித்தாள் ஹீனா.

அவளுடைய வாக்குமூலத்தை குறிப்பெடுத்துக் கொண்டார் நீதிபதி. அர்ஜுனுடைய வக்கீல், சங்கருக்காக ஹீனாவின் வாக்குமூலத்தை வைத்து வாதாடினார். தீர்ப்பு நாளை அறிவித்துவிட்டு அனைவரையும் கலைந்து செல்ல உத்தரவிட்டார் நீதிபதி.

அர்ஜுனுடைய வக்கீல் அவர்களிடம் வந்தார். அவருடைய முகம் நம்பிக்கை இழந்து காணப்பட்டது.

"ஐ அம் சாரி அர்ஜுன் சார். நம்மால எதுவும் செய்ய முடியாது. அவர் மாஷாவைப் பப்ளிக்கா கொன்னிருக்காரு. நிறைய பேர் அவர் கொன்னதை பாத்திருக்காங்க"

"என்னுடைய வாக்குமூலத்தை எடுத்துக்க மாட்டாங்களா?" என்றாள் ஹீனா

"உங்க வாக்குமூலம் தான் அவருடைய தண்டனையை குறைக்க போகுது. ஆனா, அவருக்கு குறைந்தபட்ச தண்டனை நிச்சயம் கிடைக்கும்"

இதய சங்கிலி (முடிவுற்றது )Where stories live. Discover now