Part 45

1.4K 85 9
                                    

பாகம் 45

உயர் வகுப்பு, மக்களால் நிரம்பி இருந்த அந்த கூடம், துப்பாக்கி குண்டின் ஓசையால் அதிர்ந்தது. அடுத்த நிமிடம் அந்த அறை முழுவதும் நிசப்தம் நிலவியது. ஏனென்றால், சுட்டவர் சங்கர். ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தவர் மாஷா. தன் தந்தையின் எந்த செயலுக்கும் அசராத அர்ஜுன், அவருடைய அந்த செயலுக்காக அதிர்ந்து போனான். இந்த அதிர்ச்சி நிறைந்த திருப்பத்தை எதிர்பாராத அவன், சிலை போல் நின்றிருந்தான். இந்துவின் நிலையைப் பற்றி சொல்லவே தேவையில்லை. துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டவுடனேயே, அவள் அர்ஜுனை இறுக்கமாக கட்டிக் கொண்டுவிட்டாள்.

பல வருடங்களுக்கு முன் தான் ஆரம்பித்த ஆட்டத்தை, அன்று சங்கரே முடித்து வைத்தார். ரத்தம் வழிந்தோட, தன் கண்களைத் திறந்தபடி கீழே விழுந்து கிடந்தார் மாஷா. தன் கையில் இருந்த துப்பாக்கியை கீழே போட்டார் சங்கர். அவரது முகம், தெள்ளத் தெளிவாய் இருந்தது. மாஷாவை கொன்றதற்கான எந்த குற்ற உணர்ச்சியும் அவர் முகத்தில் தென்படவில்லை. சரியான திட்டத்தோடு தான், அவர் அங்கு வந்திருந்தார் போல் தெரிகிறது. போலீசில் பிடிபட்டால் கூட, சும்மா இருக்க மாட்டார் மாஷா. மீண்டும் மீண்டும் ஏதாவது தொந்தரவு கொடுத்துக்கொண்டே தான் இருப்பார். அப்படி இருக்கும் போது, அவரை போலீஸில் பிடித்துக் கொடுப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது? சங்கர் எண்ணியது சரி தான்... மாஷா, அப்படி செய்து தான் இருப்பார்.

வரவேற்புக்கு வந்திருந்த, சங்கருடைய நண்பர் குணசேகரன், அவரை நோக்கி வந்தார்.

"என்ன சங்கர் இப்படி பண்ணிட்ட? நீ இப்படி செய்வேன்னு தெரிஞ்சிருந்தா, மாஷா இந்த ஹோட்டல தங்கி இருக்கிற விஷயத்தை, நான் உன்கிட்ட சொல்லியிருக்கவே மாட்டேன்" என்றார் வருத்தமாக.

குணசேகரன் தான் மாஷா அந்த ஹோட்டலில் தங்கியிருக்கும் விஷயத்தை சங்கருக்கு சொன்னவர். மாஷாவை அந்த ஓட்டலில் பார்த்த பொழுது, மாஷா தான் வரவேற்பிற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருப்பதாக தவறாக நினைத்தார் குணசேகரன். கையோடு போனை போட்டு சங்கரை பாராட்டவும் செய்தார். அப்பொழுது தான், மாஷா, திருமண வரவேற்பு நடக்கும் அதே இடத்தில் தங்கியிருப்பதை பற்றி தெரிந்து கொண்டார் சங்கர். மாஷா ஏன் அங்கு தங்கியிருக்கிறார் என்பதை யூகிப்பதில் அவருக்கு எந்த சிரமமும் இருக்கவில்லை.

இதய சங்கிலி (முடிவுற்றது )Where stories live. Discover now