Part 23

1.5K 90 8
                                    

பாகம் 23

இந்துவின் அணைப்பில் இருந்து தன்னை விடுவித்து கொண்டு, அந்த அறையை விட்டு வெளியேறினான் அர்ஜுன். அவனுக்கு, இந்துவை பற்றி சிந்திக்க சிறிது அவகாசம் தேவை. அதனால் காரில் ஏறி எங்கோ புறப்பட்டுச் சென்றான். ஏசியை போடாமல், வெளிக்காற்றை சுவாசித்தபடி சென்றான்.

வாழ்க்கைக்கு *ரீவைண்ட் பட்டன்* இல்லை. துரதிர்ஷ்டவசமாக, நம் மனதிற்கு இருக்கிறது... நம் வாழ்வில் நடைபெறும் ஒவ்வொரு விஷயத்தையும் அது ரீவைண்ட் செய்து பார்க்க தவறுவதில்லை. சில நேரம், அது நம்மை சிரிக்க வைக்கிறது, அல்லது அழ வைக்கிறது. அது அவரவருடைய தலையெழுத்தை பொறுத்தே அமைகிறது.

அந்த விதத்தில் நமது கதாநாயகன் அதிர்ஷ்டசாலி தான். அவனுடைய நினைவுகள், அவனை புன்னகைக்க செய்தது. சற்று நேரத்திற்கு முன் நடைபெற்ற நிகழ்வை அவன் மறுபடி மறுபடி தன் மனதில் ரீவைண்ட் செய்து பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தான். மனதிற்கு ஏற்றமளித்த இனிமையான நினைவு அது. அவனை கட்டி அணைக்க அவள் தயங்காதது, அவனுக்கு பிடித்திருந்தது. அதற்கும் மேலாக, அவள் அவனிடம் எடுத்துக்கொண்ட உரிமை, அவனுக்கு மிக பிடித்திருந்தது. அவன் அறையில் தங்கிய தீருவது என்று அவள் காட்டிய பிடிவாதம் மிக மிக பிடித்திருந்தது. அவனுடைய மனைவி நல்லிணக்கம் வாய்ந்தவள். யாருக்கும் எளிதில் கிடைக்காதவள். அவன் அம்மாவைப் போல்... இல்லை இல்லை... அவனுடைய அம்மாவைவிட அவள் சிறந்தவள். அவனுடைய அம்மா கூட, அவனை விட்டுவிட்டு சென்று விட்டாரே...! அது அவனுடைய நலத்திற்காக தான் என்ற போதிலும் அவர் அதை செய்திருக்க கூடாது. யாருமற்ற ஓர் அன்னிய தேசத்தில் அவனை தனியாய் தவிக்க விட்டிருக்கக்கூடாது... மாறாக, அவனுக்கு தோள் கொடுத்து ஆதரித்திருக்கவேண்டும். அர்ஜுன் அதைப் பற்றி அடிக்கடி நினைப்பதுண்டு. ஆனால் இந்து அப்படி அல்ல. அவன் தன்னை வெறுக்கிறான் என்று தெரிந்தபோதிலும், அவள் அவனை விட்டு விலக தயாராக இல்லை. அப்படி என்றால், அவள் அவனுடைய உணர்வுகளை மதிக்கிறாள் என்று தானே அர்த்தம்...! அப்படியே வண்டியை திருப்பிக் கொண்டு, வீட்டை நோக்கி பயணப்பட்டான் அர்ஜுன்.

இதய சங்கிலி (முடிவுற்றது )Where stories live. Discover now